தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தங்கர்பச்சான் படத்துக்கு வ‌ரி விலக்கு

Go down

தங்கர்பச்சான் படத்துக்கு வ‌ரி விலக்கு Empty தங்கர்பச்சான் படத்துக்கு வ‌ரி விலக்கு

Post  ishwarya Thu Mar 07, 2013 12:54 pm

அழுற பிள்ளைக்கு பால் என்கிற விஷயம் தங்கர்பச்சான் விஷயத்தில் உறுதியாகியிருக்கிறது.

ஓடாத பெ‌ரிய படங்களுக்குதான் தியேட்டர் தர்றாங்க, என்னை மாதி‌ரி ஒலகப் படம் எடுக்கிறவங்களுக்கு தியேட்டர் கேன்டீன்கூட கிடைக்கிறதில்லை என்று மேடை தோறும் மூக்கு சிந்தி வந்தார் தங்கர். தீபாவளிக்கு அம்மாவின் கைப்பேசியை வெளியிட்டு திருவிழா கலெக்சன் பார்க்கலாம் என்றிருந்தவருக்கு துப்பாக்கி, போடா போடி போன்ற படங்கள் அதேநாளில் வெளியாவதால் சிறிது வயிற்றுக் கடுப்பு.

இப்போது பார்த்தால் மற்ற‌‌ப் படங்கள் வெளியாகுமா ஆகாதா என்று தடுமாறிக் கொண்டிருக்க அம்மாவின் கைப்பேசி ஐம்மென்று திருவிழா ரேஸில் முதலில் நிற்கிறது. இந்தப் படம் தீபாவளிக்கு கன்ஃபார்ம் என்கிறார்கள். கும்கி தீபாவளிக்கு வெளிவரவில்லை என்று எழுதிய போது, ஆருடா அது ராங் தகவல் தர்றது என்று சாடிய லிங்குசாமியின் குரலையே இப்போது காணோம். போடா போடி வரவா போகவா என்று இழுத்தடிக்கிறது.

அம்மாவின் கைப்பேசியை பார்த்த சென்சார் வழக்கமான, அசத்திப்புட்டீங்க ரெடிமேட் வாழ்த்துகளுடன் யு சான்றிதழ் தந்திருக்கிறது. கூடவே படத்துக்கு வ‌ரி விலக்கு கிடைத்துள்ளதாக‌க் கூறுகிறார்கள்.

இனியாவது தங்கர்பச்சான் தனது பஞ்சப் பாட்டை நிறுத்துவாரா?
அம்மாவின் கைப்பேசி, தங்கர்பச்சான்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum