தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ் சினிமா என்னை அவமானப்படுத்தியது – தங்கர்பச்சான்

Go down

தமிழ் சினிமா என்னை அவமானப்படுத்தியது – தங்கர்பச்சான் Empty தமிழ் சினிமா என்னை அவமானப்படுத்தியது – தங்கர்பச்சான்

Post  ishwarya Thu Apr 11, 2013 5:47 pm

அழகி படத்தை எடுத்தபோது என்னை இந்த சினிமா உலகம் அவமானப்படுத்தியது. ஊருக்கு ஓடிவிடச் சொன்னார்கள் பலர். ஆனால் அந்த அவமானங்களே பின்னர் வெற்றியாக மாறின, என்றார் இயக்குநர் தங்கர் பச்சான். செவன்த்சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரிப்பில், பார்த்திபன் கதாநாயகனாக நடித்து இயக்கிய படம், ‘வித்தகன்’. இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் நேற்று காலை நடந்தது. பாடல்களை, இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் வெளியிட்டார்.

இந்த விழாவில், தங்கர்பச்சான் கலந்துகொண்டு பேசும்போது, அழகி படத்தை எடுத்துவிட்டு தான் பட்ட அவமானங்களை வெளிப்படையாகக் கூறி அதிரவைத்தார்.

அவர் கூறுகையில், “நான் இயக்கிய ‘அழகி’ படம், ஒரு கோடியே எழுபது லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டது. தயாரிப்பாளர் பாதி விலைக்கு விற்க முன்வந்து, அந்த படத்தை 120 முறை திரையிட்டு காண்பித்தும் யாரும் வாங்க முன்வரவில்லை.

அது கூட பரவாயில்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு போகட்டும். என்னை அவர்கள் அவமானப்படுத்தியது போல், அவர்களின் பெயர்களை சொல்லி நானும் அவமானப்படுத்த விரும்பவில்லை.

தயாரிப்பாளராகவும், மிகப்பெரிய இயக்குனராகவும் இருக்கக்கூடிய ஒருவர் படம் பார்த்துவிட்டு, ஒரு வார்த்தை கூட பேச விரும்பாமல், முகத்தை திருப்பிக் கொண்டு போய்விட்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum