திவ்யாவின் ட்வீட் - அதிர்ந்த டைரக்டர்
Page 1 of 1
திவ்யாவின் ட்வீட் - அதிர்ந்த டைரக்டர்
நான் தூங்கப் போறேங்கிறதையும் ட்விட்டரில் எழுதிவிட்டுதான் பெட்ஷீட்டையே எடுக்கிறார்கள் சில நட்சத்திரங்கள். சரி, அது அவங்க பர்சனல் மேட்டர். பிசினஸ் மேட்டரையும் இவர்களின் ட்விட்டர் செய்தியைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியிருப்பதுதான் சம்பந்தப்பட்டவர்களை சுத்தலில் விட்டிருக்கிறது.
FILE
மாதம் ஒரு பிரச்சனையை கிளப்பவில்லை என்றால் திவ்யா ஸ்பந்தனாவுக்கு
தூக்கம் வருவதில்லை. அரசியல் குடும்பத்தின் வாரிசு என்பதால் தேடி வரும் பிரச்சனைகளையும் தூர விலகி நின்றுதான் வேடிக்கைப் பார்ப்பார்கள் சம்பந்தப்பட்டவர்கள். இந்த மாதம் ஸ்பந்தனாவிடம் சிக்கியது இயக்குனர் விஜய பிரசாத்.
இவர் இயக்குகிற புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் ஸ்பந்தனா. பிறகு அட்வான்ஸ் தரவில்லை என்று படத்திலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார். உடனே அட்வான்ஸ் தரப்பட, படத்திலிருந்து விலகும் முடிவை திரும்பப் பெற்றார்.
இந்நிலையில் அவரின் ட்விட்டர் பக்கத்தைப் பார்த்த விஜய பிரசாத் அதிர்ந்து போனார். கேரக்டர் சரியில்லை அதனால் படத்தில் நடிக்கப் போவதில்லை என அதில் தெரிவித்திருக்கிறார் ஸ்பந்தனா.
இன்னும் எத்தனைமுறை இந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்தை திவ்யா ஆடப்போகிறாரோ?
திவ்யா ஸ்பந்தனா, விஜய பிரசாத்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» யம்மாம் பெரிய கோப்பை; அதிர்ந்த அஞ்சலி!
» 'அன்னக்கொடியில நான் இல்லியா?' லேட்டா அதிர்ந்த இனியா!
» ரஜினி முத்தமிட்ட டைரக்டர்
» மாணவர்களுக்கு டைரக்டர் சசிக்குமார் அட்வைஸ்!
» அடிக்கடி பெயரை மாற்றும் டைரக்டர்!
» 'அன்னக்கொடியில நான் இல்லியா?' லேட்டா அதிர்ந்த இனியா!
» ரஜினி முத்தமிட்ட டைரக்டர்
» மாணவர்களுக்கு டைரக்டர் சசிக்குமார் அட்வைஸ்!
» அடிக்கடி பெயரை மாற்றும் டைரக்டர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum