தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

'அன்னக்கொடியில நான் இல்லியா?' லேட்டா அதிர்ந்த இனியா!

Go down

'அன்னக்கொடியில நான் இல்லியா?' லேட்டா அதிர்ந்த இனியா! Empty 'அன்னக்கொடியில நான் இல்லியா?' லேட்டா அதிர்ந்த இனியா!

Post  ishwarya Mon Mar 18, 2013 5:26 pm

அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் அமீருக்கு ஜோடியாக ஒப்பந்தமானவர் நடிகை இனியா. ரவிக்கை போடாமல், கொசுவம் வைத்த சேலை கட்டி முதல் கட்டப் படப்பிடிப்பில் கூட பங்கேற்றுவிட்டு வந்தார். இந்த நிலையில் பாரதி ராஜா அமீர் இடையில் பிரச்சினை உண்டாகி, அமீரே படத்தில் இல்லை என்றாகிப் போனது. அமீர் - இனியா பகுதிகளை ஸ்க்ரிப்டிலிருந்தே தூக்கிவிட்ட பாரதிராஜா, இப்போது கார்த்திகா மற்றும் அவருக்கு ஜோடியாக வரும் புதுமுக நடிகர் தொடர்பான காட்சிகளை மட்டும் படமாக்கி வருகிறார். அமீரே இல்லை என்றான பிறகு, இனியா மட்டும் படத்தில் இருப்பாரா என்ன... அவரும் தூக்கப்பட்டுவிட்டார். இந்த விஷயம் அவருக்கு இப்போதுதான் தெரியுமாம். தகவல் கேள்விப்பட்டதும் அவர் கேட்டது... 'என்னது பாரதிராஜா சார் படத்துல நான் இல்லையா?!' படத்திலிருந்து தான் தூக்கப்பட்டதையே இப்பதான் அறிந்து கொண்டாராம் இனியா. கொஞ்சம் முன்னாடியே சொல்லியிருந்தா இந்நேரம் ரெண்டு மூணு படத்துக்கு அட்வான்சை வாங்கிப் போட்டு, அதுல கொஞ்சத்தை எடுத்து அரை கிரவுண்டு எடத்தை வாங்கி போட்டிருக்கலாம். இப்படி மோசம் போயிட்டோமே என்று மூக்கு சிந்தியவர், வேக வேகமாக நாலு மலையாள படங்களை ஒப்புக் கொண்டிருக்கிறார். அதில் ஒரு படத்தோட டைட்டில் 'பூ படத்தில் இல்லாத ஓரிடம்'. ஏப்ரல் 10 ந் தேதியிலிருந்து ஷூட்டிங் கிளம்புகிறார்களாம்.
படத்தில் இருந்து நீக்கியது பற்றி இனியாவிடம் கேட்டபோது, "முல்லைப் பெரியாறு மற்றும் பெப்சி தொழிலாளர்கள் போராட்டத்தால் 'அன்னக்கொடியும், கொடிவீரனும்' படப்பிடிப்புக்கு தடங்கள்கள் ஏற்பட்டன. பாரதிராஜாவால் அமீர், கார்த்திகா லட்சுமணன் மற்றும் என்னிடம் இருந்து சேர்ந்தவாறு கால்ஷீட் பெறுவது கஷ்டமாக இருந்தது. எனவே அப்படத்தில் நடிக்க முடியவில்லை. அடுத்த படத்தில் என்னை நடிக்க வைப்பதாக பாரதிராஜா உறுதி அளித்திருக்கிறார். என்னை, நீக்கியதால் நான் வருத்தப்படவில்லை. பாரதிராஜாவின் அடுத்த படத்தில் நான் கண்டிப்பாக இருப்பேன்." என்றார். அட! இம்புட்டு ட்யூப்லைட்டா நீங்க..?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum