சீனாவின் முதலாவது விண்வெளி வீராங்கனை
Page 1 of 1
சீனாவின் முதலாவது விண்வெளி வீராங்கனை
விண்வெளிக்கு முதல் தடவையாக ஒரு பெண்ணை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை சீனா செய்து வருகின்றது.
அந்தப்
பெண்ணையும் மேலும் இரு விண்வெளி வீரர்களையும் ஏற்றிச் செல்லும் விண்கலம்
சனிக்கிழமையன்று புறப்படவுள்ளதாக சீன விண்வெளி திட்டத்தைச் சேர்ந்த
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்காலத்தில் சீனாவின் விண்வெளி ஆய்வு கூடம் ஒன்றை அமைப்பதற்கான சோதனை நடவடிக்கைகளை இந்த விண்பயணம் ஆராயும்.
தமது நாட்டின் முதலாவது விண்வெளி வீராங்கனையாக லியூ யங் திகழ்வார் என்று விமரிசையான விளம்பரங்களுடன் சீனா அறிவித்துள்ளது.
ஒரு குழந்தையின் தாயான 33 வயதான இவர், சீன விமானப்படையில் மேஜர் தர அதிகாரியாவார்.
அவர் குறித்த விவரணப்படங்களை அரசாங்க தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
போக்குவரத்து விமானத்தின் விமானியாக செயற்பட்ட
அவர், பல பறவைகள் விமானத்தில் மோதி அதன் ஒரு இயந்திரம் செயற்பாட்டை இழந்த
தருணத்திலும், கூட அதனால் ஏற்பட்ட அழுத்தங்களை மிகவும் லாவகமாக கையாண்டவர்
ஆவார்.
கைப்பந்து வீராங்கனையான இவர், இரு ஆண்டுகளுக்கு
முன்னர்தான் சீன விண்வெளித்திட்டத்தில் இணைந்தார். ஆனால் மிகவும்
திறமைசாலியாக அவர் காணப்பட்டார்.
தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட ஒரு
செய்தியாளர் சந்திப்பில், தன்னுடன் சென்சுவோ 9 விண்கலத்தில்
பயணிக்கவிருக்கும் இரு ஆண் விண்வெளிவீரர்களுடன் அவர் கலந்துகொண்டார்.
''விடாமுயற்சிதான் வெற்றிக்கு முக்கியம்'' என்று கூறிய லியூ யங், தான் சீனாவின் பெயரைக் காப்பாற்றுவேன் என்று கூறினார்.
அவர்களது விண்கலம் சனிக்கிழமையன்று மாலையில் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
இந்தப் பயணத்தின் போது விண்வெளியின் ஆய்வுகூடத்துடன் தமது கலத்தை இணைக்கும் நடவடிக்கைகளை சீன விண்வெளிவீரர்கள் பரிசோதிப்பார்கள்.
2020 ஆம் ஆண்டளவில் தமது சொந்தமான ஆய்வுகூடத்தை விண்வெளியில் நிறுவ சீனா திட்டமிட்டுள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அரையிறுதிக்கு முன்னேறிய முதலாவது இந்திய வீராங்கனை!
» இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வாகை சூடினார்!
» தென்னாபிரிக்காவில் முதலாவது டெஸ்ட் வெற்றியை பெற்றது இலங்கை
» டாக்டரானார் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா! (படங்கள்)
» வணிக ரீதியிலான முதலாவது விண்கலம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum