தென்னாபிரிக்காவில் முதலாவது டெஸ்ட் வெற்றியை பெற்றது இலங்கை
Page 1 of 1
தென்னாபிரிக்காவில் முதலாவது டெஸ்ட் வெற்றியை பெற்றது இலங்கை
தென்னாபிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 208 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
டேர்பன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெறுவதற்கு இரண்டாவது இன்னிங்ஸில் 450 ஓட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் போட்டியின் நான்காவது நாளான இன்று வியாழக்கிழமை அவ்வணி 241 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
2010 ஆம் ஆண்டு கடந்த ஓகஸ்ட் மாதம் காலியில் நடைபெற்ற இந்திய அணியுடனான போட்டியின்பின் இலங்கை அணி டெஸ்ட் போட்டியொன்றில் வெற்றி பெறுவது இதுவே முதல்தடவையாகும்.
இலங்கை அணி இதற்குமுன் இறுதியாக விளையாடிய 15 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி எதையும் பெறத் தவறியிருந்தது.
இவ்வருடத்தில் இலங்கை அணி பெற்ற முதலாவது டெஸ்ட் வெற்றி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
1997 ஆம் ஆண்டின் பின்னர் இவ்வருடத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில்தானும் வெற்றி பெறாமல் போகக்கூடிய நிலையை இலங்கை அணி எதிர்நோக்கியிருந்தது. ஆனால் இவ்வருடத்தில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் அரிய வெற்றியொன்றை இலங்கை அணி பெற்றுக்கொண்டது.
சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் ஓய்வு பெற்ற பின்னர், இலங்கை அணி டெஸ்ட் போட்டியொன்றில் வென்றமையும் இதுவே முதல் தடவையாகும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தென்னாபிரிக்காவில் முதலாவது டெஸ்ட் வெற்றியை பெற்றது இலங்கை
» முதலாவது T 20இல் 5 விக்கெட்டுக்களால் இலங்கை வெற்றி!
» இலங்கை டெஸ்ட்: வங்கதேசம் ரன் குவிப்பு
» முக்கோண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: இலங்கை அணியில் மஹ்ரூப், சானக்க
» வணிக ரீதியிலான முதலாவது விண்கலம்
» முதலாவது T 20இல் 5 விக்கெட்டுக்களால் இலங்கை வெற்றி!
» இலங்கை டெஸ்ட்: வங்கதேசம் ரன் குவிப்பு
» முக்கோண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: இலங்கை அணியில் மஹ்ரூப், சானக்க
» வணிக ரீதியிலான முதலாவது விண்கலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum