தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ அனுமதியில்லை

Go down

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ அனுமதியில்லை Empty திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ அனுமதியில்லை

Post  meenu Thu Feb 28, 2013 12:18 pm

திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்வதற்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கும் யோசனை ஏதும் அரசிடம் இல்லை என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ஹெச்.ஆர். பரத்வாஜ் கூறியிருக்கிறார்.

அதற்கான சட்டம் கொண்டுவரும் உத்தேசமும் அரசிடம் இல்லை என்று மாநிலங்களவையில் இன்று பாஜக, காங்கிரஸ் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டார்.

திருமணம் செய்து கொள்ளாமலே ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதால், அதுபோன்ற பெண்களின் உரிமைகளை குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் பாதுகாக்க முடியும் என்றும் பரத்வாஜ் கூறினார்.

இதுபோன்ற உறவு முறையில் பெண்களை பயன்படுத்திக் கொண்ட பின் அவர்கள் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவதில் இருந்து குடும்ப வன்முறைச் சட்டம் பாதுகாக்கும் என்று குறிப்பிட்ட அவர், இதுதொடர்பாக தமது அமைச்சகத்திற்கு எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்றார்.

வேகமாக மாறி வரும் சமுதாயத்திற்கு ஏற்ப, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் திருமணமின்றி சேர்ந்து வாழ ஏதுவாக சட்டம் இயற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மகாராஷ்டிராவில் பெண்களின் உரிமைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்ற யோசனை எதுவும் சட்ட அமைச்சகத்திற்கு வரவில்லை என்று அமைச்சர் விளக்கம் அளித்தார்.

இந்தப் பிரச்சினையில் எவ்வித சர்ச்சைகளுக்கும் உள்ளாக தாம் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

இதனை மறுத்த பரத்வாஜ், குடும்ப வன்முறைச் சட்டத்தை அரசு மேலும் உறுதியாக நடைமுறைப்படுத்த உள்ளதாகக் கூறினார்.

முன்னதாக பாஜக உறுப்பினர்கள் பிரபாத் ஜா, மாயா சிங், காங்கிரஸ் கட்சியின் பிரபா தாகூர் ஆகியோர் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினர்.

நீதிபதி மாலிமாத் கமிட்டி அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின்படி திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்வதற்கான அனுமதியை வழங்க அரசு பரிசீலித்து வருகிறதா? என்று அவர்கள் கோரினர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நானும், என் கணவரும் இரண்டு வருடங்கள்கூட சேர்ந்து வாழ இயலாத சூழ்நிலையில் இருக்கிறோம். நாங்கள் சேர்ந்து வாழ என்ன செய்ய வேண்டும்? எங்களுக்கு 20 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
» ஆதிபகவன் - 18 வயதுக்குட்பட்டவர்கள் அனுமதியில்லை
» தமிழகத்தில் டேம் 999 படத்துக்கு அனுமதியில்லை
» சேர்ந்து நடிக்கயிருக்கும் அமிதாப், ர‌ஜினி
» குழந்தைகளோட சேர்ந்து தூங்குங்க.. மனசுக்கு நல்லது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum