தமிழகத்தில் டேம் 999 படத்துக்கு அனுமதியில்லை
Page 1 of 1
தமிழகத்தில் டேம் 999 படத்துக்கு அனுமதியில்லை
முல்லைப் பெரியாறு அணை உடைவதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட டேம் 999 படத்தை தமிழகத்தில் திரையிட உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது.
கேரளாவில், முல்லைப் பெரியாறு அணை உடைந்து, கிராமங்களில் தண்ணீர் புகுவது போன்று எடுக்கப்பட்ட படத்தை வெளியிட தமிழக அரசு தடை விதித்திருந்தது. இத்திரைப்படத்தை வெளியிட்டால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக திரைப்பட இயக்குநர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள், ஒரு மாநில மக்களின் உணர்வுகளுக்குத்தான் நீதிமன்றம் முன்னுரிமை அளிக்க வேண்டும். தனி மனிதரின் உரிமைக்கு அல்ல. தமிழக மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கும் வகையில் காட்சியமைப்புகளைக் கொண்ட இப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவது சரியல்ல. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இப்படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» `டேம்-999′ படத்திற்கு தமிழகத்தில் மேலும் 2 வாரம் தடை
» டேம் 999 படத்துக்கு ஆதரவு: நடிகை ரீமா,வினய்க்கு தடை?
» ஆதிபகவன் - 18 வயதுக்குட்பட்டவர்கள் அனுமதியில்லை
» தெரியாம நடிச்சுட்டேன்! – வருத்தம் தெரிவிக்கும் டேம் 999 பட நாயகி விமலா ராமன்
» டேம்.999 திரைப்படம்: ஒரு கண்ணோட்டம் !
» டேம் 999 படத்துக்கு ஆதரவு: நடிகை ரீமா,வினய்க்கு தடை?
» ஆதிபகவன் - 18 வயதுக்குட்பட்டவர்கள் அனுமதியில்லை
» தெரியாம நடிச்சுட்டேன்! – வருத்தம் தெரிவிக்கும் டேம் 999 பட நாயகி விமலா ராமன்
» டேம்.999 திரைப்படம்: ஒரு கண்ணோட்டம் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum