தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பலகாய் குழம்பு

Go down

பலகாய் குழம்பு            Empty பலகாய் குழம்பு

Post  ishwarya Tue Feb 26, 2013 11:43 am

* மொச்சைக் காய் – 200 கிராம்
* பறங்கிக்காய் - 250 கிராம்
* கத்தரிக்காய் – 200 கிராம்
* அவரைக்காய் – 200 கிராம்
* தட்டப்பயத்தங்காய் – 200 கிராம்
* சர்க்கரை வள்ளிக்கிழங்கு – 200 கிராம்
* உருளைக்கிழங்கு - 200 கிராம்
* தக்காளி - 100 கிராம்
* சின்ன வெங்காயம் - 100 கிராம்
* ப.மிளகாய் - 10
* வரமிளகாய் - 10
* பாசிப்பருப்பு - 200 கிராம்
* மஞ்சள்த்தூள் - 1 ஸ்பூன்
* எண்ணெய் (அ) வெண்ணைய் (தேவைக்கு)
* உப்பு - தேவைக்கு
* கறிவேப்பில்லை ,
* கொத்தமல்லி – சிறிது
*காய்கள் அனைத்தையும் சுத்தம் செய்து நறுக்கிகொள்ளவும்.

*ஒரு அகலமான பாத்திரத்தில் பாசிப்பருப்பை போட்டு பருப்பு முழ்கும் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி மஞ்சத்தூள் போட்டு அடுப்பில் வைக்கவும்.

*பருப்பு ஒரு கொதி வந்ததும் அதில் அனைத்து காய்களையும் போட்டு வேக விடவும். (காய்கள் மூழ்கும் அளவிற்க்கு தண்ணீர் இருக்க வேண்டும்)

*காய்களை போட்ட சிறிது நேரத்தில் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், வரமிளகாய், கறிவேப்பில்லை, உப்பு என அனைத்தையும் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.

*அனைத்து காய்களும் (குழம்பு கொஞ்சம் திக்கா இருக்கட்டும்) ஒரு சேர வெந்ததும் வெண்ணையை (எண்ணெய்) ஊற்றி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் மிகவும் சுவையான பலகாய்குழம்பு தயார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum