முருங்கைகாய் கார குழம்பு
Page 1 of 1
முருங்கைகாய் கார குழம்பு
தமிழ்நாட்டில் காரக்குழம்பு என்றாலே அது முருங்கைக்காய் காரக் குழம்பு தான். அந்த குழம்பை அனைத்து வீடுகளிலும் பண்டிகையின் போது செய்வார்கள். அத்தகைய முருங்கைக்காய் காரக்குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
முருங்கைகாய் - 2 (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
புளி கரைசல் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின் அதில் வெங்காயத்தை போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கவும். பின் அதில் தக்காளியை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள முருங்கைகாயை போட்டு சிறிது நேரம் வதக்கி, மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறி, பின் அதில் கொஞ்சம் தண்ணீரை விட்டு, முருங்கைகாய் வேகும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.
காய் வெந்ததும், அதில் புளிக் கரைசலை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்கவிடவும். குழம்பானது நன்கு சுண்டியதும், அதில் சிறிது நல்லெண்ணெயை ஊற்றி, இறக்கி விடவும்.
இப்போது சுவையான முருங்கைகாய் கார குழம்பு ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சோயா உருண்டைக் குழம்பு (மீல்மேக்கர் குழம்பு)
» மிளகு குழம்பு மிளகு குழம்பு
» கருவாடு குழம்பு
» பலகாய் குழம்பு
» மூலிகை குழம்பு
» மிளகு குழம்பு மிளகு குழம்பு
» கருவாடு குழம்பு
» பலகாய் குழம்பு
» மூலிகை குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum