எண்ணெய் கத்தரிக்காய் காரக் குழம்பு
Page 1 of 1
எண்ணெய் கத்தரிக்காய் காரக் குழம்பு
என்னென்ன தேவை?
பிஞ்சு கத்தரிக்காய் - 10,
புளி - எலுமிச்சை அளவு,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
தனியா, உளுத்தம் பருப்பு - தலா 2 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - சிறிது,
வறுத்த வேர்க்கடலை - அரை கப்,
வெந்தயம், கடுகு - தலா கால் டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 6,
பெருங்காயம் - சிறிது,
வறுத்துப் பொடித்த எள் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - கால் கப், கறிவேப்பிலை சிறிது.
எப்படிச் செய்வது?
வெறும் கடாயில் தனியா, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து சிவக்க வறுக்கவும். தேங்காய்த் துருவலை தனியே வறுக்கவும். வறுத்த அனைத்தையும் வேர்க்கடலையுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சுத்தம் செய்து, வகிர்ந்து வைத்துள்ள கத்தரிக்காய்களைப் பொரித்தெடுக்கவும்.
பிறகு அதே கடாயில் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுது சேர்த்துக் கைவிடாமல் வதக்கவும். மசாலா கெட்டியாக வரும் போது, புளியைக் கரைத்து விட்டு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு பொரித்து வைத்துள்ள கத்தரிக்காய் சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும் போது, பெருங்காயத் தூளும், பொடித்த எள்ளும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எண்ணெய் கத்தரிக்காய்
» எண்ணெய் கோவைக்காய் குழம்பு
» உருளைகிழங்கு காரக் குழம்பு
» சுவையான கத்திரிக்காய் காரக் குழம்பு
» எண்ணெய் கத்தரிக்காய்
» எண்ணெய் கோவைக்காய் குழம்பு
» உருளைகிழங்கு காரக் குழம்பு
» சுவையான கத்திரிக்காய் காரக் குழம்பு
» எண்ணெய் கத்தரிக்காய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum