எண்ணெய் கத்தரிக்காய்
Page 1 of 1
எண்ணெய் கத்தரிக்காய்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
தனியா (கொத்துமல்லி விதை) - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 8 (உங்கள் ருசிக்கேற்ப எண்ணிக்கையை கூட்டலாம்/குறைத்துக் கொள்ளலாம்)
சின்ன வெங்காயம் - 7
தக்காளி - 2
தேங்காய் - 1/4 மூடி
கறிவேப்பிலை - சிறிது
பிஞ்சு கத்தரிக்காய் - 1/4 கிலோ
நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1 கப்
பச்சைமிளகாய் - 2
புளி - எலுமிச்சை அளவு
கடுகு - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு, சமையல் எண்ணெய்
கறிவேப்பிலை, நறுக்கிய கொத்துமல்லி இலை - சிறிது
கத்தரிக்காய்களை கழுவி ஈரமில்லாமல் துடைத்து நான்காக பிளந்து வைக்கவும்.கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கத்தரிக்காய்களை போட்டு மிதமான தீயில் வதக்கி எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் கடலைபருப்பு போட்டு சிவந்ததும் தனியா, சீரகம் போட்டு சின்ன வெங்காயம், கருவேப்பிலை, சிவப்பு மிளகாய் சேர்த்து வறுக்கவும். தக்காளி சேர்த்து வதக்கி இறுதியாக தேங்காயைப் போட்டு வறுத்து ஆற வைக்கவும். ஆறியதும் நைசாக அரைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து வைக்கவும்
வேறொரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் எண்ணெய் காய வைத்து கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்..
வெங்காயம் வதங்கியவுடன் புளிக்கரைசல் ஊற்றி கொதிக்க விடவும்.
நன்கு கொதித்தவுடன், அரைத்து வைத்துள்ள மிளகாய்கூட்டினை கரைத்து ஊற்றி, உப்பு சேர்க்கவும். குழம்பு கொதி வந்தவுடன், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 3 நிமிடங்கள் விடவும்..பின்னர் வதக்கிய கத்தரிக்காய் சேர்த்து மிதமான சூட்டில் சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். நறுக்கிய மல்லி இலை தூவி பரிமாறவும்..
இந்த எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு சூடான சாதத்துடன் சாப்பிட,சுவையாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எண்ணெய் கத்தரிக்காய்
» எண்ணெய் கத்தரிக்காய் காரக் குழம்பு
» உங்கள் முகத்தில் எண்ணெய் தன்மை இருக்கிறதா ? கவலையை விடுங்க எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க
» கத்தரிக்காய் எள் கறி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum