தக்காளி சூப்
Page 1 of 1
தக்காளி சூப்
என்னென்ன தேவை?
தக்காளி - அரை கிலோ,
பூண்டு - 4 பல்,
பீட்ரூட் அல்லது கேரட் துருவல் - அரை கப்,
வெங்காயம் - 1,
லீக்ஸ் மற்றும் செலரி - சிறிது,
ஏலக்காய், பட்டை, கிராம்பு - தலா 4,
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், மிளகு - 1டீஸ்பூன்,
மிளகுத் தூள் - சிறிது.
உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
கடாயில் வெண்ணெய் போட்டு, ஏலக்காய், பட்டை, கிராம்பை வெடிக்க விடவும். பூண்டு, மிளகு, வெங்காயம், லீக்ஸ், செலரி, கேரட் அல்லது பீட்ரூட் துருவல் சேர்த்து இளம் சிவப்பு நிறத்துக்கு வதக்கவும். தக்காளியை நறுக்கிச் சேர்த்து வதக்கவும்.
கலவை மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் விட்டு, குக்கரில் 1 விசில் வைத்து எடுக்கவும். பிறகு மசிக்கவோ, ஜூஸ் கிரஷரில் அரைத்தோ எடுக்கவும். மிக்சியில் அரைக்கக் கூடாது. அரைத்தெடுத்ததில் உப்பு, மிளகுத் தூள் சேர்த்துக் கொதிக்க விட்டு, அப்படியே டம்ளரில் ஊற்றிக் குடிக்கக் கொடுக்கலாம்.
அல்லது ஒரு கரண்டி பால் அல்லது கிரீம் அல்லது ஒயிட் சாஸ் விட்டு, இன்னொரு கொதி வந்ததும் கிண்ணங்களில் ஊற்றி சூடாகப் பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum