தக்காளி சூப்
Page 1 of 1
தக்காளி சூப்
தேவையான பொருள்கள்:
தக்காளி = 5
வெங்காயம் = 1
மிளகுத்தூள் = தேவையான அளவு
பூண்டு = 6 பல்
வெண்ணெய் = 2 தேக்கரண்டி
சோள மாவு = 1 தேக்கரண்டி
உப்பு = தேவையான அளவு
கொத்தமல்லி இலை = தேவையான அளவு
செய்முறை:
தக்காளி, வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் வெண்ணெய் விட்டு உருகியதும் அதில் பூண்டு போட்டு வதக்கி பிறகு வெங்காயம் சேர்த்து இரண்டும் நன்றாக வதங்கியதும் தக்காளி கலந்து நன்றாக மசியும் வரை வதக்கி பிறகு தேவைக்கேற்ப நீர் விட்டு 15 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும்.
பிறகு வடிகட்டிய நீரில் சோள மாவை கலந்து சிறிது நீர் சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து பின்னர் மிளகுத்தூள், கொத்தமல்லி இலை தூவி சூடாக பரிமாறவும்.
மருத்துவ குணங்கள்:
இந்த சூப் உடலுக்கு வலிமை தரக்கூடியது. இதை வாரத்திற்கு இரண்டு நாட்கள் வைத்து குடித்தால் உடல் வலிமையுடன் பலம் பெறும். இந்த தக்காளி சூப் விரைவாக ஜீரணமாக கூடியது.
உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ஃபாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், ஃபாஸ்ப்போரிக் அமிலம் ஆகியவை தக்காளிப் பழத்தில் இருக்கின்றன. தக்காளியில் அதிக அளவில் மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செம்பு, சிறிது கால்சியம் ஆகியவை உள்ளன. மேலும் வைட்டமின் C, வைட்டமின் B மற்றும் வைட்டமின் D ஆகியவை காணப்படுகிறது.
இதனால் உடல் பலவீனம், சோம்பல் ஆகியவற்றை நீக்கும். எலும்புகள் மற்றும் பற்களுக்கு பலத்தை தரும். இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கலாம். கபம், சளியை வெளியேற்றும். மலச்சிக்கலை குறைத்து ஜீரண சக்தியை அளிக்கும்.
வெங்காயத்தில் கால்சியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது கூறுகள் அதிகம் உள்ளது. இதனால் ஜலதோஷம், ஆஸ்துமா, சுவாச பிரச்சனைகள் மற்றும் இருமல் போன்ற நோய்கள் குறைகிறது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» தக்காளி சூப்
» சிவப்பு தக்காளி சூப்
» தக்காளி சூப்
» துவரம்பருப்பு தக்காளி சூப்
» தக்காளி-பூண்டு சூப்
» சிவப்பு தக்காளி சூப்
» தக்காளி சூப்
» துவரம்பருப்பு தக்காளி சூப்
» தக்காளி-பூண்டு சூப்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum