நிலவாகைச் சூரணம்
Page 1 of 1
நிலவாகைச் சூரணம்
தேவையான பொருட்கள்:
நிலவாகை முழுச்செடி – 400 கிராம்
தான்றிக்காய் – 100 கிராம்
நெல்லிக்காய் – 100 கிராம்
கடுக்காய் – 100 கிராம்
சர்க்கரை – 100 கிராம்
செய்முறை:
நிலவாகை முழுச்செடியை நன்கு நிழலில் உலர்த்தி கல் உரலில் இடித்து வடிகட்டிக் கொள்ளவும். தான்றிக்காய், நெல்லிக்காய், கடுக்காய் இவைகளை குறிப்பிட்டுள்ள எடைக்கு 50 கிராம் கூடுதலாக வாங்கி, மூன்றையும் உரலில் போட்டு இடித்து வடிகட்டிக் கொள்ளவும். நாட்டுச் சர்க்கரையைக் கலப்பதாக இருந்தால் நல்ல சர்க்கரையை இடித்து கல், தூசி இவைகளைப் போக்கி மரத்தட்டில் கொட்டி வெயிலில் காய வைத்து எடுத்து சூரணத்தை மண் பானையில் போட்டு வெல்லத் தூளைக் கொட்டி மர அகப்பையால் நன்கு கலந்து மண் தட்டால் மூடி வைத்து, எடுத்து கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் பத்திரப்படுத்த வேண்டும்.
உபயோகிக்கும் முறை:
காலை, மாலை உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக இரண்டு கிராம் எடையுள்ள தூளுடன் சிறிது வெந்நீர் அருந்த வேண்டும். இப்படி 40 நாட்கள் சாப்பிட வேண்டும்.
தீரும் நோய்கள்:
மேக தொட்பான நோய்கள், கரப்பான், அஸ்தி சுரம், அஸ்தி வெட்டை, கடும் பித்த வாய்வு, ஊரல், சோறு தள்ளல், மேக ஊரல், அரிப்பு, கிராணி மயக்கம், வாய் கசப்பு, வாயில் நீர் ஊறல், கண் எரிச்சல், மலக்கட்டு, உடல் எரிச்சல் ஆகிய நோய்கள் குறையும்.
பத்தியம்:
உருளைக் கிழங்கு, சேப்பைக் கிழங்கு, முள்ளங்கி, வாழைக்காய், பூசணிக்காய், கத்திரிக்காய், பரங்கிக்காய், வற்றல் வகைகள், கடலை எண்ணெய், எள் எண்ணெய், தயிர், பழஞ்சோறு, குளிர்ந்த பானங்கள், மாமிச வகைகள், இனிப்பு பண்டங்கள், கண் விழிப்பு, உடலுறவு ஆகியவைகள் மருந்துண்ணும் நாட்களில் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்..
உண்ண வேண்டிய உணவு:
மிளகுப் பொங்கல், கோதுமை உப்புமா, பொங்கல், கஞ்சி, புழுங்கலரிசிச் சோறு, வாழைக் கச்சை, அவரைப் பிஞ்சு, புடலை பிஞ்சு, துவரை, பாசிப் பருப்பு, அகத்திப் பிஞ்சு, பசுமோர், பால் மிளகு, சீரகம், பூண்டு, வெந்தயம், எலுமிச்சம் பழம் ஆகியவைகள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நாளும் குளியல் ஏழு நாட்களுக்கு ஒருமுறை தேங்காய் எண்ணெய் அல்லது பசு நெய் சேர்த்து தலைக்கு குளிக்க வேண்டும்.
குறிப்பு:
நடு இரவில் அல்லது இடைவேளைகளில் கடும் பசி ஏறப்பட்டால் கோதுமையால் செய்த உணவை அல்லது பாலை மட்டும் அருந்தலாம்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum