நீரிழிவு சூரணம்
Page 1 of 1
நீரிழிவு சூரணம்
அறிகுறிகள்:
நீரிழிவு.
தேவையான பொருள்கள்:
வேப்பம் பருப்பு = 10 கிராம்
நாவற்பருப்பு = 40 கிராம்
வெண்துளசி = 20 கிராம்
கருந்துளசி = 20 கிராம்
சிவகரந்தை முழுச்செடி = 40 கிராம்
சுக்கு = 10 கிராம்
மிளகு = 10 கிராம்
ஏலக்காய் = 10 கிராம்
ஜாதிக்காய் = 10 கிராம்
பசும்பால் = 100 மி.லி
இளநீர் = 100 மி.லி
செய்முறை:
வேப்பம் பழத்தை ஒரு பாத்திரத்தில் ஊற விட்டு கையால் பிசைந்து சதைப்பற்றை நீக்கி விட்டு கொட்டைகளை எடுத்து மண் பானையில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற விடவும். பின்பு கொட்டைகளை எடுத்து மரத்துண்டின் மேல் வைத்து உடைத்து மேல் தோலை நீக்கி விட்டு உள்ளிருக்கும் பருப்பை மட்டும் எடுத்து கொள்ளவும்.
நாவற் பழத்தை தண்ணீர் ஊற்றி ஊற வைத்து பின் கையால் பிசைந்து சதைப்பற்றை நீக்கி விட்டு கொட்டைகளை எடுத்து மண் பானையில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற விட்டு எடுக்கவும். பின்பு கொட்டைகளை எடுத்து மரத்துண்டின் மேல் வைத்து உடைத்து மேல் தோலை நீக்கி விட்டு உள்ளிருக்கும் பருப்பை மட்டும் எடுத்து கொள்ளவும்.
வெண்துளசி, கருந்துளசி இரண்டையும் தனித்தனியாக பிரித்து நிழலில் உலர்த்தவும். சிவகரந்தை முழுச்செடியை தூய நீரில் கழுவி நிழலில் உலர்த்தவும்.
சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். மிளகை இளம் வறுவலாக வறுத்து கொள்ளவும்.
ஏலக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு 100 மி.லி தண்ணீர் ஊற்றி சுண்டும் அளவுக்கு காய்ச்சி பின் நிழலில் உலர்த்தவும்.
ஜாதிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி போட்டு 100 மி.லி பசும்பால் ஊற்றி பால் சுண்டும் வரை நன்கு காய்ச்சி பின் அதை எடுத்து தூய நீரில் கழுவவும். மீண்டும் மண் பானையில் போட்டு 200 மி.லி இளநீர் ஊற்றி இளநீர் சுண்டும் வரை நன்கு காய்ச்சி இறக்கி நிழலில் உலர்த்தவும்.
எல்லா மருந்துகளையும் ஈரமில்லாமல் நன்கு உலர்த்தி உரலில் போட்டு நன்றாக இடித்து ஒரு தட்டில் போட்டு 6 மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு எடுத்து மீண்டும் உரலில் போட்டு இடித்து மெல்லிய துணியால் சலித்து வைத்து கொள்ளவும்.
இந்த சூரணத்தை காலை, மாலை சாப்பிட்டு வெந்நீர் அருந்தி வந்தால் நீரிழிவு குறையும்.
உபயோகிக்கும் முறை:
1 தேக்கரண்டி அளவு காலையில் சாப்பிட்டு பின் வெந்நீர் அருந்தவும். மாலை அரை தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வெந்நீர் அருந்தி வந்தால் நீரிழிவு குறையும்.
குறிப்பு:
இந்த மருந்தை உண்ணும் நாட்களில் மலச்சிக்கல் ஏற்பட்டால் மருந்தை ஒரு நாள் நிறுத்தி சுகபேதி அருந்தவும். சுகபேதி அன்று மோரும், சாதமும் மட்டும் சாப்பிடவும். அடுத்த நாள் முதல் மருந்தை சாப்பிடவும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» நீரிழிவு சூரணம்
» நீரிழிவு சிறப்புப் பார்வை - இந்தியாவில் நீரிழிவு நோய்
» நவ யாச லோக சூரணம்
» இரைப்பிற்கான சூரணம்
» குங்கிலியச் சூரணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum