மூலிகை சூரணம்
Page 1 of 1
மூலிகை சூரணம்
தேவையான பொருள்கள்:
திப்பிலி = 100 கிராம்
மிளகு = 50 கிராம்
சுக்கு = 50 கிராம்
அதிமதுரம் = 25 கிராம்
கொத்தமல்லி = 25 கிராம்
சீரகம் = 25 கிராம்
நெல்லிக்காய் வற்றல் = 25 கிராம்
செய்முறை:
திப்பிலியையும் , மிளகையும் ஒன்றிரணடாக உடைத்து இளம் வறுவலாக வறுத்து கொள்ளவும்.
சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். அதிமதுரத்தை ஒன்றிரண்டாக இடித்து பசும்பாலில் 3 மணி நேரம் ஊர வைத்து உலர்த்தி கொள்ளவும்.
கொத்தமல்லி, சீரகம் இரண்டையும் பொன் வறுவலாக வறுத்து கொள்ளவும். நெல்லிக்காய் வற்றலை இடித்து கொள்ளவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு நன்றாக இடித்து கொள்ளவும்.
ஒரு மண் பானையில் 1 லிட்டர் பசும்பாலை ஊற்றி ஒரு சலவை துணியால் வேடுகட்டி, வேட்டின் மேல் மருந்து தூளை கொட்டி மண் மூடியால் மூடி விறகடுப்பில் வைக்கவும். சிறு தீயாக 15 நிமிடங்கள் எரிக்கவும். தூளை எடுத்து மண் தட்டில் பரப்பி நிழலில் உலர்த்தி கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
உபயோகிக்கும் முறை:
இந்த சூரணத்தை காலை 6 மணி, பகல் 12 மணி, மாலை 6 மணி ஆகிய நேரங்களில் அரை தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் வாதம், பித்தம், கபம் ஆகியவை குறையும்.
தீரும் நோய்கள்:
இந்த சூரணத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாதம், பித்தம் மற்றும் கபம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்கள் குறையும்.
குறிப்பு:
இந்த சூரணம் சாப்பிட்டு வரும் போது தயிர், இளநீர், கிழங்கு வகைகள், கடலை வகைகள் ஆகியவற்றை தவிர்க்கவும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» மூலிகை சூரணம்
» ஐந்து மூலிகை அற்புத சூரணம்
» ஐந்து மூலிகை அற்புத சூரணம்
» நவ யாச லோக சூரணம்
» அவிபதி சூரணம்
» ஐந்து மூலிகை அற்புத சூரணம்
» ஐந்து மூலிகை அற்புத சூரணம்
» நவ யாச லோக சூரணம்
» அவிபதி சூரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum