இன்று பக்ரீத் பண்டிகை : பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை ஏற்பாடு
Page 1 of 1

சென்னை: பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெறுகின்றன. முஸ்லீம்களின் முக்கிய திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவ தும் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் காலையில் சிறப்பு தொழுகைகள் நடைபெறுகின்றன. திருவல்லிக்கேணி பள்ளிவாசல், பெரியமேடு பள்ளிவாசல், அண்ணாசாலை பள்ளிவாசல் உள்ளிட்ட அனைத்து பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இது மட்டுமல்லாமல் சென்னை தீவுத்திடல் மற்றும் ஓட்டல்களிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெறுகிறது. பக்ரீத் பண்டிகை திருநாளில் ஏழைகள் மாமிசம் உண்டு மகிழ வேண்டும் என கருதி இறைச்சியை தானமாக வழங்குவது வழக்கம். இதன்படி ஒவ்வொ ருவரும் தங்களின் வசதிக்கேற்ப ஆடு, மாடுகளை வெட்டி அவற்றின் ஒரு பகுதியை ஏழைகளுக்கு தானமாக வழங்குவார்கள். சென்னையில் குர்பானிக்காக ஆந்திர மாநிலம் கடப்பா, குண்டூர், நெல்லூர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான செம்மறி ஆடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதேபோல், வடமாநிலங்களில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களுக்கு சுமார் 100 ஒட்டகங்கள் வந்துள்ளன. வடசென் னைக்கு மட்டும் 25
ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. சிறப்பு தொழுகைக்கு பிறகு ஒட்டகம், ஆடு, மாடுகளை வெட்டி, இறைச்சி ஏழை களுக்கு தானமாக வழங்கப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘பெரிய ஆடு ஒன்று விலை ரூ.20 ஆயிரம் வரை விற்கப்பட்டது. ஒட்டகம் ரூ.1.5 லட் சம் வரை விற்பனையானது’ என்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டிச.23ல் வைகுண்ட ஏகாதசி : ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசன ஏற்பாடு

» இன்று 12-12-12 குபேரர் கோயிலில் சிறப்பு பூஜை
» இன்று ஆடி முதல் வெள்ளி : அம்மன் கோயில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு
» பக்ரீத் ஸ்பெஷல் மட்டன் ரெசிபிக்கள்!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum