இன்று ஆடி முதல் வெள்ளி : அம்மன் கோயில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு
Page 1 of 1

ஊத்துக்கோட்டை: ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் கோயில்களில் பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் நடக்கும். பக்தர்கள் விரதம் இருந்து அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி,
தொங்கும் பல்லக்கில் சென்று அம்மனுக்கு நேர்த்தி கடனை செலுத்துவர். ஆடி வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்துவதுண்டு. இன்று ஆடி,
முதல் வெள்ளிக்கிழமை என்பதால் கோயில்கள் பெண்கள் கூட்டம் அலைமோதியது.
திருவள்ளூர் வேம்புலியம்மன், புட்லூர் அங்காள பரமேஸ்வரி, பெரியபாளையம் பவானி அம்மன் கோயில்களில் பக்தர்கள் திரண்டிருந்தனர். பெண்கள் மஞ்சள் ஆடை உடுத்தி அம்மனுக்கு தீபம் ஏற்றினர். சிலர் பொங்கல் வைத்து வழிபட்டனர். பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை என்பதால் ஊத்துக்கோட்டை, பாலவாக்கம், தண்டலம், ஆத்துப்பாக்கம், வெங்கல், தாமரைபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து பெண்கள் மஞ்சள் ஆடை அணிந்து பாதயாத்திரையாக சென்றனர். அங்குள்ள புற்றில் பால் ஊற்றி பவானி அம்மனை வழிப்பட்டனர்.
முன்னதாக இன்று அதிகாலை பவானி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன், ஆதிகாமாட்சியம்மன், கருக்கினில் அமர்ந்தவள் அம்மன், திரவுபதி அம்மன், தும்பவனத்தம்மன் கோயில்கள் உள்ளன. மாமல்லபுரம், கல்பாக்கம் செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், மதுராந்தகம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள துர்க்கையம்மன், கங்கையம்மன், ஊத்துக்காட்டு அம்மன் கோயில்களில் இன்று அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பெண்கள் கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்டனர். பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» புத்தாண்டு கொண்டாட்டம் : தேவாலயம், கோயில்களில் சிறப்பு வழிபாடு
» மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருநீர்மலை சைவ, வைணவ கோயில்களில் ரத சப்தமி சிறப்பு வழிபாடு

» ஆடிப்பெருக்கு : பெண்கள் சிறப்பு வழிபாடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum