டிச.23ல் வைகுண்ட ஏகாதசி : ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசன ஏற்பாடு
Page 1 of 1

திருமலை: வைகுண்ட ஏகாதசியான வரும் டிசம்பர் 23ம் தேதி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் எல்.வி.சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது: ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வைகுந்த வாசல் வழியாக தரிசனம் செய்தால் வைகுண்டத்துக்கே சென்றதாக ஐதீகம். இம்முறை வைகுண்ட ஏகாதசி டிசம்பர் 23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருவதால், பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்ய வருவார்கள்.
குறிப்பாக இந்த நாட்களில், கோவிந்த மாலை அணிந்த பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து பாதயாத்திரையாகவே திருமலைக்கு வருகின்றனர்.
அவர்களுக்கும் அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு பகுதியில் மலைபாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்கள் திருமலையில் வழங்கப்படும் ரூ.300க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கோவை, வேலூர், ஐதராபாத், பெங்களூரூ, மும்பை, புனே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்களில் பக்தர்களுக்கு சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், திருமலையில் அன்றைய தினம் இலவச தரிசனத்தில் நேரடியாக வரும் பக்தர்கள் தரிசனம் செய்யவும், பக்தர்கள் அனைவருக்கும் அன்னபிரசாதம், தேவையான இடங்களில் குடிநீர் வசதி, நடமாடும் கழிவறை அமைக்கவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு சுப்பிரமணியம் கூறினார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» டிச.23ல் வைகுண்ட ஏகாதசி : ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசன ஏற்பாடு
» 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி : ஏழுமலையான் கோயிலில் சிறப்பு சேவைகள் ரத்து
» ஏகாதசி விரதம் & வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு ! கிடைப்பதர்க்கரிய சொர்க்கவாசல் திறப்பு!!
» வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது
» வைகுண்ட ஏகாதசி விரத மகத்துவம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum