தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இன்று 12-12-12 குபேரர் கோயிலில் சிறப்பு பூஜை

Go down

இன்று 12-12-12 குபேரர் கோயிலில் சிறப்பு பூஜை Empty இன்று 12-12-12 குபேரர் கோயிலில் சிறப்பு பூஜை

Post  ishwarya Sat Feb 16, 2013 1:33 pm

சென்னை: இன்று 12-12-12 மிகவும் அற்புதமான நாள். இது மீண்டும் 100 ஆண்டுகளுக்கு பிறகே வரும். 12ல் உள்ள 1 எண் கணிதப்படி சூரியனையும், 2 சந்திரனையும் குறிக்கும். சூரியன் பகலையும், சந்திரன் இரவையும் குறிக்கும். பகல், இரவு சேர்ந்ததே ஒருநாள். சூரியனிடமிருந்து ஒளியை வாங்கி பிரதிபலிப்பது சந்திரன். சந்திரன் மன உறுதி, எடுத்த காரியத்தை முடிக்கும் வல்லமையை கொடுப்பவர். சூரியன் நிர்வாக திறன், அரசாங்க ஆதரவை கொடுப்பவர். இன்றைய நாளில் மூன்று முறை சூர்ய-சந்திர சேர்க்கை இணைந்து வருவதால் நாம் தொடங்கும் எந்த காரியமும் முழுமையடையும்.

இன்றைய நட்சத்திரம் அனுஷம், மகாலட்சுமி தாயாரின் நட்சத்திரம். புதன்கிழமை, புதனின் அதிதேவதையான குபேரருக்கு உகந்த நாள். இன்று மாலை 5 மணிக்கு மேல் அமாவாசை திதி உள்ளது. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காத இன்றைய அதிசய நாளில் வண்டலூர் அடுத்த ரத்தினமங்கலம் லட்சுமி குபேரர் கோயிலில் மகாலட்சுமி தாயாருக்கும், குபேர பகவானுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட உள்ளன. ராஜலட்சுமி குபேரா டிரஸ்டுக்கு 94440 20084 என்ற எண்ணில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு 2013ம் ஆண்டின் புது வருட காலண்டர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  நாபலூர் அகத்தீஸ்வரர் கோயிலில் உலக நன்மை, மழை வேண்டி பைரவர்களுக்கு சிறப்பு பூஜை
» நாபலூர் அகத்தீஸ்வரர் கோயிலில் உலக நன்மை, மழை வேண்டி பைரவர்களுக்கு சிறப்பு பூஜை
» டிச.23ல் வைகுண்ட ஏகாதசி : ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசன ஏற்பாடு
» திருச்சானூர் கோயிலில் இன்று பிரம்மோற்சவம்
» குபேரர் சம்பத்து உண்டாக குபேரர் மந்திரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum