தமிழ் புத்தாண்டு : மாங்காய் இனிப்பு பச்சடி
Page 1 of 1

Mango Pachadi
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விருந்தில் மாங்காய் பச்சடி செய்வது சிறப்பம்சமாகும்.
தேவையான பொருட்கள்
புளிப்பில்லாத மாங்காய் – 1
வெல்லம் – 1 கப்
உப்பு – 1 சிட்டிகை
கார்ன் ஃப்ளோர் – 1 டீஸ்பூன்
ஏலப்பொடி – 1/4 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
வேப்பம்பூ – 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க- எண்ணை, கடுகு, பச்சை மிளகாய்.
செய்முறை
மாங்காயை மெலிதான செதில்களாகச் சீவிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியில் எண்ணை வைத்து கடுகு, பச்சை மிளகாய் தாளித்து, மாங்காய், உப்பு, கால் கப் தண்ணீர் விட்டு மிதமான தீயில் வேகவைக்கவும்.
ஒரு கப் மாங்காய்த் துருவலுக்கு ஒரு கப் என்ற அளவில் வெல்லம் சேர்க்கவும். வெல்லம் கரைந்ததும் தண்ணீர் அல்லது பாலில் கார்ன்ஃப்ளோர் கரைத்துவிட்டு, சேர்ந்தாற்போல் வந்ததும் இறக்கவும்.
நெய்யில் வேப்பம்பூவைப் பொன்னிறமாக வறுத்து, அடுப்பிலிருந்து இறக்கி, அந்த வாணலி சூட்டிற்கே ஓரளவு கருப்பாகும் வரை வைத்திருந்து பிறகு பச்சடியின் மேலே தூவவும். புளிப்பான மாங்காயாக இருந்தாலும் நன்றாக இருக்கும். வெல்லம் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிலர் வேப்பம்பூவை வறுத்தபின், பொடித்தும் சேர்ப்பார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இனிப்பு மாங்காய்
» இனிப்பு,புளிப்பு மாங்காய் தொக்கு
» இன்றைய சமையல் இனிப்பு மாங்காய் ஊறுகாய்

» கோயில்களில் தமிழ் புத்தாண்டு விழா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum