தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோ‌யி‌ல்க‌ளி‌ல் தமிழ் புத்தாண்டு விழா

Go down

கோ‌யி‌ல்க‌ளி‌ல் தமிழ் புத்தாண்டு விழா Empty கோ‌யி‌ல்க‌ளி‌ல் தமிழ் புத்தாண்டு விழா

Post  meenu Thu Feb 07, 2013 5:10 pm

சென்னை மைலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவிலில், புதன் கிழமைய‌ன்று தமிழ் புத்தாண்டையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரத்துடன் பூஜைகள் நடக்கின்றன.

தமிழ் புத்தாண்டு தினமான தை மாதம் முதல் நாளான புதன்கிழமை காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இரவில், அம்மன் தங்கரதத்தில் திருக்கோவில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

பிரார்த்தனை ஸ்தலமான மைலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் ஏறக்குறைய 1300 ஆண்டுகளுக்கு முன் சுயம்புவாக அருவுருவ தோற்றத்தில் முகப்பில் திரிசூலமும், மேல் பகுதி தாமரை மொட்டு வடிவிலும் தோன்றியுள்ளதால் தாமரையின் மறுபெயர் முண்டகம் என்பதால் முண்டகக்கண்ணி அம்மன் என்று அழைக்கப்படுகிறது.

குறுங்காலீஸ்வரர் கோவில்

கோயம்பேடு‌வி‌ல் உ‌ள்ள குறுங்காலீஸ்வரர் கோவிலில், தமிழ் புத்தாண்டையொட்டி, குறுங்காலீஸ்வரர் மற்றும் அறம்வளர்த்த நாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெறுகின்றன.

மேலு‌ம் த‌‌மிழக‌த்‌தி‌ல் உ‌ள்ள அனை‌த்து‌க் கோ‌யி‌ல்க‌ளிலு‌ம் பொ‌ங்க‌ல் ம‌ற்று‌ம் த‌மி‌ழ்‌ப் பு‌த்தா‌ண்டு ப‌ண்டிகைககளையொ‌ட்டி ‌சிற‌ப்பு பூஜைக‌ள் நடைபெறு‌ம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum