சின்ன பாகற்காய் பொரியல்
Page 1 of 1
சின்ன பாகற்காய் பொரியல்
இனிப்பு, கசப்பு என அறுசுவைகளையும் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு பாகற்காய். சின்ன வெங்காயம் அதிகம் சேர்த்து இதை சிறு குழந்தைகளும் சாப்பிடும் வகையில் செய்து கொடுக்கலாம். நீங்களும் செய்து பாருங்களேன்.
தேவையான பொருட்கள்
பாகற்காய் - கால் கிலோ
சின்ன வெங்காயம் - கால் கிலோ
வரமிளகாய் - 3
கடுகு : அரை டீ ஸ்பூன்
உளுந்து : அரை டீ ஸ்பூன்
சீரகம் : அரை டீ ஸ்பூன்
கடலைபருப்பு : அரை டீ ஸ்பூன்
கறிவேப்பிலை : ஒரு கொத்து
உப்பு - தேவைக்கு
பெருங்காயத்தூள் சிறிதளவு
பொரியல் செய்முறை
பாகற்காயில் மேல் மற்றும் கீழ் காம்புகளை நீக்கி தண்ணீரில் நன்றாக அலசவும். அகலமான பாத்திரத்தில் உப்பு சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும். லேசாக தண்ணீர் தெளித்தால் போதும். பத்து நிமிடங்களில் காய் நன்கு வெந்து விடும். தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த உடன் தாளிக்கும் பொருட்களைப் போடவும். கடுகு வெடித்த உடன் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கவும். இதனுடன் பாகற்காய் சேர்த்து நன்கு சுருள வதக்கவும். சுவையான வெங்காய பாகற்காய் பொரியல் தயார். பாகற்காய்க்கு சரி அளவில் வெங்காயம் சேர்க்க வேண்டும். அப்பொழுதுதான் கசப்பு சுவை தெரியாது. ருசி அதிகமாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாகற்காய் பொரியல்
» பாகற்காய் பொரியல்
» பாகற்காய் பொரியல்
» பாகற்காய் பொரியல்
» சமையல் குறிப்பு : சின்ன வெங்காயப் பொரியல்
» பாகற்காய் பொரியல்
» பாகற்காய் பொரியல்
» பாகற்காய் பொரியல்
» சமையல் குறிப்பு : சின்ன வெங்காயப் பொரியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum