பாகற்காய் பொரியல்
Page 1 of 1
பாகற்காய் பொரியல்
தேவையானப்பொருட்கள்:
செய்முறை:
- பாகற்காய் – 100 கிராம்
- சின்ன வெங்காயம் – 100 கிராம்
- தக்காளி- 100 கிராம்
- எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
- கடுகு – 1 டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
- மிளகாய் வற்றல்- 3
- கறிவேப்பிலை – 2 இணுக்கு
- தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்
- உப்பு -தேவைக்கு
செய்முறை:
- பாகற்காயை சிறியதாய் கட் செய்து கொள்ளவும்.
- அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.
- நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- பின்பு பாகற்காய் சேர்த்து பிரட்டி, சிறிது உப்பு போட்டு, மூடி 5 நிமிடம் வேக விடவும்.
- திறந்து அத்துடன் தக்காளி சேர்த்து பிரட்டவும். எல்லாம் சேர்ந்து மசிந்து வரும்.
- உப்பு சரி பார்த்து தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டவும்.
- சுவையான பாகற்காய் பொரியல் ரெடி. கசப்பு அவ்வளவாக தெரியாது. அருமையாக இருக்கும்.
- இதனை சாதாரண சாதத்துடன், குழம்பு, கூட்டோடு பரிமாற அசத்தலாக இருக்கும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாகற்காய் பொரியல்
» பாகற்காய் பாகற்காய்
» பாகற்காய் பொரியல்
» பாகற்காய் பாகற்காய்
» பாகற்காய் பாகற்காய்
» பாகற்காய் பாகற்காய்
» பாகற்காய் பொரியல்
» பாகற்காய் பாகற்காய்
» பாகற்காய் பாகற்காய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum