பாகற்காய் பொரியல்
Page 1 of 1
பாகற்காய் பொரியல்
தேவையானப்பொருட்கள்:
பாகற்காய் – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி- 100 கிராம்
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்- 3
கறிவேப்பிலை – 2 இணுக்கு
தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
செய்முறை:
பாகற்காயை சிறியதாய் கட் செய்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.
நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின்பு பாகற்காய் சேர்த்து பிரட்டி, சிறிது உப்பு போட்டு, மூடி 5 நிமிடம் வேக விடவும்.
திறந்து அத்துடன் தக்காளி சேர்த்து பிரட்டவும். எல்லாம் சேர்ந்து மசிந்து வரும்.
உப்பு சரி பார்த்து தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டவும்.
சுவையான பாகற்காய் பொரியல் ரெடி. கசப்பு அவ்வளவாக தெரியாது. அருமையாக இருக்கும்.
இதனை சாதாரண சாதத்துடன், குழம்பு, கூட்டோடு பரிமாற அசத்தலாக இருக்கும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum