ஆரோக்கியமான...குடைமிளகாய் சான்விட்ச்!!!
Page 1 of 1
ஆரோக்கியமான...குடைமிளகாய் சான்விட்ச்!!!
காலை உணவு தான் உடலுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் காலை உணவானது நீண்ட இடைவெளிக்குப் பின் உண்பதால், உடலில் அன்றைய நாளுக்கு தேவையான சக்தியானது அப்போது தான் கிடைக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் உண்ணாமல் இருக்கலாம். ஆனால் காலையில் மட்டும் உண்ணாமல் இருக்க கூடாது. அத்தகைய காலை உணவானது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில், சீக்கிரம் செய்யும் வகையில் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். அதற்கு சான்விட் தான் மிகவும் சிறந்தது. இப்போது அந்த சான்விட்சில் குடைமிளகாய் சான்விட்ச் எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
குடைமிளகாய் - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
பிரட் - 4-8
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
சீஸ் - 2-3
வெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. முதலில் குடைமிளகாய், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நன்கு நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் பிரட்-ன் முனைகளை வெட்டி அகற்றி விடவும்.
2. பின் ஒரு வாணலியை வைத்து அதில் சிறிது வெண்ணெய் விட்டு நறுக்கிய காய்கறிகளை போட்டு சிறிது உப்பைத் தூவி, 2 நிமிடம் வதக்கி இறக்கி விடவும்.
3. பிறகு பிரட்-ன் இரண்டு புறமும் வெண்ணெயை தடவி, அதன் மேல் வதக்கிய காய்கறிகளை வைக்கவும்.
4. பின் அதன் மேல் சீஸ் துண்டுகளை வைத்து, மிளகுத்தூள் மற்றும் உப்பை தூவவும்.
5. ஒரு தவாவை அடுப்பில் வைத்து சூடு செய்து, அதில் இந்த பிரட்-ஐ வைத்து சிறிது வெண்ணெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாக சூடு செய்யவும்.
இப்போது சூடான சுவையான குடைமிளகாய் சான்விட்ச் ரெடி!!! வேண்டுமென்றால் அழகுக்காக இதன்மேல் சிறிது முட்டைகோஸை நறுக்கி தூவி, தக்காளி சாஸ் விட்டு சாப்பிடலாம். அசைவம் சாப்பிடுபவர்கள், அதில் முட்டையை ஆம்லெட் செய்தோ அல்லது பொரியல் செய்து வைத்தோ சாப்பிடலாம்.
மேலும் வேறு எதாவது காய்கறிகள் சேர்க்க வேண்டுமென்றாலும், காய்கறிகளை எண்ணெயில் வறுத்து பயன்படுத்தலாம். பிரட்டில் வெள்ளை பிரட்டிற்கு பதிலாக ப்ரௌன் பிரட்டை பயன்படுத்தலாம். ஏனெனில் ப்ரௌன் பிரட்டானது கோதுமை அல்லது மற்ற தானியங்களால் செய்யப்பட்டது ஆகும். ஆகவே அது டையட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்தது. ஆனால் வெள்ளை பிரட்டானது மைதாவால் செய்யப்பட்டது. இது உடலுக்கு அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குடைமிளகாய் சான்விட்ச்
» குடைமிளகாய் சிக்கன் டிக்கா
» கோதுமை பிரட் குடைமிளகாய் சான்விட்ச்
» குடைமிளகாய் சாதம்
» குடைமிளகாய் ஊத்தப்பம்
» குடைமிளகாய் சிக்கன் டிக்கா
» கோதுமை பிரட் குடைமிளகாய் சான்விட்ச்
» குடைமிளகாய் சாதம்
» குடைமிளகாய் ஊத்தப்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum