கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு
Page 1 of 1
கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு
மதிய வேளையில் எப்போதும் சாம்பார், குழம்பு செய்து போர் அடித்திருந்தால், அப்போது வீட்டில் இருக்கும் பூசணிக்காய் மற்றும் வாழைக்காயை வைத்து கேரளா ஸ்டைலில் ஒரு கூட்டு செய்து சாப்பிடலாம். இப்போது அந்த பூசணி கூட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
வெள்ளை பூசணிக்காய் - 1 கப்
வாழைக்காய் - ஒன்று
தேங்காய - 1/2 கப் (துருவியது)
புளிப்புத் தயிர் - 1 கப்
பச்சை மிளகாய் - 4
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
காய்கறிகளின் தோல்களை நீக்கி, சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, வேக வைக்க வேண்டும்.
அதற்குள் மிக்ஸியில் பச்சைமிளகாய், துருவிய தேங்காய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அதனை காய்கறிகள் வெந்ததும், அதனுடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பின்னர் புளித்த தயிரை அதோடு சேர்த்து, நுரை வரும் வரை கொதித்ததும் இறக்கிவிடவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அந்த காய்கறி கலவையுடன் சேர்த்து, கிளறி விட வேண்டும்.
இப்போது சுவையான பூசணி கூட்டு ரெடி!!! இதனை சாதத்துடனோ அல்லது சப்பாத்தியுடனோ சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum