முந்திரி தக்காளி மசாலா
Page 1 of 1
முந்திரி தக்காளி மசாலா
Kaju Tomato Masala
பொதுவாக முந்திரியை கேசரி போன்ற இனிப்பு வகைகளில் தான் சேர்த்து சமைப்போம். ஆனால் தற்போது அந்த முந்திரியையும், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும், நன்மைகள் பலவற்றை உள்ளடக்கிய தக்காளியையும் வைத்து ஒரு மசாலா செய்தால் சூடபராக இருக்கும். இப்போது அந்த முந்திரி தக்காளி மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
தக்காளி - 1/2 கிலோ (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 1
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 1
முந்திரி - 8
தேங்காய் - 1 கப் (துருவியது)
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1 சிட்டிகை
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் தக்காளியில் பாதியை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். மீதமுள்ளதை மிக்ஸியில் போட்டு, அத்துடன் 4 முந்திரி மற்றும் தேங்காய் போட்டு நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம், பட்டை, ஏலக்காய் போட்டு தாளிக்க வேண்டும்.
பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கியதும், தக்காளியை போட்டு நன்கு வதக்கி, அரைத்து வைத்துள்ள மசாலா, சர்க்கரை, உப்பு போட்டு, தேவையான அளவில் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.
மசாலா கொதித்ததும், அதில் கரம் மசாலா மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, நன்கு கொதிக்க விட்டு, மீதமுள்ள முந்திரியை போட்டு 1 நிமிடம் அடுப்பில் வைத்து, இறக்கி விட வேண்டும்.
இப்போது முந்திரி தக்காளி மசாலா ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரவா தக்காளி முந்திரி இட்லி
» மஹாளய அமாவாசைக்கு முந்திரி பருப்பு மசாலா மெது பக்கோடா
» வெங்காயம் தக்காளி மசாலா
» முந்திரி புட்டிங்
» முந்திரி கத்லி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum