தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜடேஜா அதிரடியால் சென்னை அணி கொல்கத்தாவை வீழ்த்தியது

Go down

ஜடேஜா அதிரடியால் சென்னை அணி கொல்கத்தாவை வீழ்த்தியது Empty ஜடேஜா அதிரடியால் சென்னை அணி கொல்கத்தாவை வீழ்த்தியது

Post  ishwarya Sat May 04, 2013 12:31 pm

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 26-வது லீக் போட்டி இன்று மாலை 4 மணிக்கு கொல்கத்தா ஈடன்காடனில் தொடங்கியது. இப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் காம்பீர் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக காம்பீர்- யூசுப் பதான் களம் இறங்கினார்கள்.

இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். 5.5 ஓவரில் 46 ரன் இருக்கும்போது கொல்கத்தா அணி முதல் விக்கெட்டை இழந்தது. காம்பீர் 25 ரன்கள் எடுத்த நிலையில் மோரிஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்த வந்த காலிஸ் பந்து ஏதும் சந்திக்காமலேயே ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

3-வது விக்கெட்டுக்கு பதானுடன், மோர்கன் ஜோடி சேர்ந்தார். மோர்கன் 2 ரன் எடுத்த நிலையில் பிராவோ பந்தில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விளையாடிய பதான் 25 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அதன் பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியில் ஜடேஜா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் சென்னை அணி களம் இறங்கியது. ஹசியுடன் அஸ்வின் தொடக்க வீரராக களம் இறங்கினார். அஸ்வின் 11 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த விஜய் 2 , ரெய்னா 7, டோனி 9, பத்ரிநாத் 6 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதனால் சென்னை அணி 15.3 ஓவரில் 71 ரன் எடுப்பதற்குள் விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து ஹசியுடன், ஜடேஜா ஜோடி சேர்ந்தார். சென்னை அணியின் ஸ்கோர் 89 ரன்னாக இருக்கும்போது ஹசி 40 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின் பிராவோ களம் இறங்கினார்.

ஜடேஜா அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தார். அவர் 14 பந்தில் 36 ரன் குவித்து சென்னை அணியை வெற்றி பெறச் செய்தார். இதனால் 19.1 ஓவரிலேயே சென்னை அணி வெற்றி இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜடேஜா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கெய்ல் அதிரடியால் கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூர்
» பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப்
» டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது
» வாட்சன் அதிரடியால் ஐதராபாத் அணியை எளிதில் வீழ்த்தியது ராஜஸ்தான்
» கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum