கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது
Page 1 of 1

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய முதல் லீக் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஹசியுடன் விஜய்க்கு பதிலாக சேர்க்கப்பட்ட விர்த்திமான் சகா களமிறங்கினார். இருவரும் கொல்கத்தா அணியின் பந்து வீச்சை தொடக்கம் முதலே விரட்டி அடித்தனர். இதனால் ஓவருக்கு சராசரியாக 10 ரன்கள் வந்தது. சிறப்பாக விளையாடிய சகா 23 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் வந்த ரெய்னா அதிரடியாக விளையாடி 44 ரன்கள் குவித்தார். சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட ஹசி 95 ரன்னில் ஆட்டமிழந்தார். 59 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்ஸருடன் இந்த ரன்னை எடுத்தார். அதன்பின் வந்த டோனி 18 ரன் எடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது.
201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கொல்கத்தா பேட்டிங்கை தொடங்கியது. ஆனால் அந்த அணியால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
அணியின் தொடக்க வீரர் காம்பீர் 14, மெக்கல்லம் 6, காலிஸ் 19 ரன்களில் அவுட் ஆனார்கள். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் பிஸ்லா வெற்றிக்காக போராடினார். ஆனால் 92 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். மோர்கன் 22 பந்தில் 32 ரன் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.
இதனால் சென்னை 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 9 போட்டிகளில் 7-ல் வெற்றி பெற்று சென்னை அணி புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்தை பிடித்தது
» ஜடேஜா அதிரடியால் சென்னை அணி கொல்கத்தாவை வீழ்த்தியது
» சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் - சகுனி முதலிடம்
» சென்னை பாக்ஸ் ஆபிஸ் – ஓகே ஓகே தொடர்ந்து முதலிடம்
» டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum