பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப்
Page 1 of 1

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 20-வது லீக் இன்று மொகாலியில் நடைபெற்றது. இப்போட்டியில் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கேப்டன் காம்பீர் பீல்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி பஞ்சாப் அணியின் கில்கிறிஸ்ட்- மந்தீப் சிங் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். கில்கிறிஸ்ட் 7 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த வோரா 17, ஹசி 12, மில்லர் 20, மெகமூத் 0, குர்கீரத் சிங் 0 ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் மந்தீப் சிங் 41 ரன்கள் எடுத்தார். 8-வது களம் இறங்கிய கோனி 18 பந்தில் 42 ரன்கள் எடுக்க பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.
கொல்கத்தா அணியின் சுனில் நரைன் 15-வது ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். 15-வது ஓவரின் 4-வது பந்தில் ஹசியும் (12), 5-வது பந்தில் மேகமூத் (0), 6-வது பந்தில் குர்கீரத் சிங் (0) ஆகியோர் அவுட் ஆனார்கள். இந்த ஐ.பி.எல். போட்டியில் எடுத்த முதல் ஹாட்ரிக் இதுவாகும்.
158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களம் இறங்கியது. ஆட்டத்தின் முதல் பந்தில் பிஸ்லா டக் அவுட் ஆனார். அடுத்து வந்த காலிஸ் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
3-வது விக்கெட்டுக்கு காம்பீர்- மோர்கன் ஜோடி சேர்ந்தனர். இருவரும் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். காம்பீர் 60 ரன்னிலும், மோர்கன் 41 ரன்களிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் வந்த வீரர்கள் சரியாக விளையாடததால் கொல்கத்தா அணி இரண்டு ஓவரில் 30 ரன் தேவைப்பட்டது.
19-வது ஓவரை அவான் வீசினார். பதானும் பாதியாவும் எதிர்கொண்டனர். முதல் பந்தை பதான் பவுண்டரிக்கு விரட்டினார். இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தில் பாதியா இமாலய சிக்சர் விளாசினார். 4-வது பந்தில் 2 ரன் எடுத்த அவர் 5-வது பந்தையும் சிக்சருக்கு விரட்டினார். ஆனால் கடைசி பந்தில் போல்டாகி வெளியேறினார். அவர் 6 பந்தில் 16 ரன் குவித்தார்.
கடைசி ஓவரில் கொல்கத்தா அணி வெற்றி பெற 11 ரன் தேவைப்பட்டது. பிரவீன்குமார் பந்து வீசினார். முதல் பந்தில் எக்ஸ்ட்ரா (ஒயிடு) ஒரு ரன் கிடைத்தது. முதல் பந்தில் இரண்டு ரன் கிடைத்தது. இந்த ரன்னும்' லெக் பைஸ்' மூலம் கிடைத்தது. 2-வது பந்தில் பதான் அவுட் ஆனார்.
இதனால் 4 பந்தில் 8 ரன் தேவைப்பட்டது. 3-வது பந்தில் செனநாயகே ஒரு ரன் எடுத்தார். 4-வது பந்தில் நரைன் ஒரு ரன் எடுத்தார். 5-வது பந்தில் செனநாயகே ரன் அவுட் ஆனார். இதனால் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.
கடைசி பந்தி ஒயிடாக வீசினார். இதனால் ஒரு பந்தில் 5 ரன் தேவைப்பட்டது. கடைசி பந்தில் நரைன் ரன் ஏதும் எடுக்கவில்லை. இதனால் பஞ்சாப் அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணி பெற்றுள்ள இரண்டாவது வெற்றி இதுவாகும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது மும்பை
» பரபரப்பான ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தியது ஹைதராபாத்
» ஜடேஜா அதிரடியால் சென்னை அணி கொல்கத்தாவை வீழ்த்தியது
» டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது
» கெய்ல் அதிரடியால் கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum