தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி?

Go down

பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி?  Empty பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி?

Post  ishwarya Sat Feb 02, 2013 6:28 pm










பிரதோஷ வரலாறு: இந்திராதி தேவர்கள், திருப்பாற்கடலை அடைந்து பாற்கடலைக் கடைய முயன்றார்கள். மந்திரகிரியை மத்தாகவும், சந்திரனைத் தறியாகவும் வாசுகி என்ற நாகராஜனைத் தாம்புக் கயிறாகவும் அமைத்தார்கள். திருமால் கூர்மமாகி மந்திரகிரியைத் தனது முதுகில் தாங்கினார். அசுரர்கள் தலைப்புறமும் தேவர்கள் வால்புறமும் நின்று கடையலானார்கள். அந்த நாள் தசமி திதி. அன்று ஒரு வேளையுண்டு திருப்பாற் கடலைக் கடைந்தார்கள். மறுநாள் ஏகாதசி பதினோராவது திதி. பாற்கடலைக் கடைந்தபோது வாசுகி வருத்தங்தாங்காது பதைபதைத்து நஞ்சை உமிழ்ந்தது. கடலில் இருந்தும் நஞ்சு தோன்றியது. வாசுகி கக்கிய ஆலமும், கடலில் தோன்றிய ஆலமும் ஒன்று சேர்ந்து ஆலாலம் எனப்பேர் பெற்றது. இந்த ஆலாலம் மிக்க பயங்கரமாக , வெப்பமுடன் உலகத்துக்கே முடிவு செய்வது போல் விண்ணவரை விரட்டியது. வலமாகவும், இடமாகவும் மறித்துத் துரத்தியது. திசை தோறும் தேவர்கள் நடுங்கி ஒடுங்கி ஓடினார்கள். வெண்ணிறமாக இருந்த விஷ்ணுமூர்த்தி விஷவேகத்தால் நீலநிறம் ஆனார். வானவர்கள் அஞ்சித்திருக்கயிலாஞ் சென்று சிவனாரிடம் அடைக்கலம் புகுந்தார்கள்.


தஞ்சம் புகுந்த வானவர்கள் தேவ தேவ மஹாதேவ அருட்கடலே! கருணைக் குன்றே! தேவரீர் ஆண்டவர்! நாங்கள் அடிமைகள், தேவரீர் உடையவர். நாங்கள் உடைமைகள். நாங்கள் பாற்கடலைக் கடைந்தோம். அந்த விவசாயத்தில் முதலில் விளைந்தது. தேவரீருக்கு உரியது என்று கூறி முறையிட்டார்கள். ஓலமிட்ட வண்ணம் இடமாகவும், வலமாகவும், இடவலமாகவும் அவர் சன்னதி முன்னுற்ற நந்திதேவரது அண்டத்தில் ஒளிந்தனர். அண்ட சராசரங்களும் சகல தேவர்களும் சிவபெருமானை ஏகச்சிந்தனையாகத் தங்களைத் காத்தருளக் கோரித்துதித்த நேரமே பிரதோஷ கால நேரமாகும். கருணையே வடிவான கண்ணுதற் கடவுள் தமது அருகில் நிற்கும் சுந்தரரைப் பார்த்து சுந்தரா அவ்விடத்தை இவ்விடத்துக்குக் கொணர்வாய் என்று பணித்தருளினார். சுந்தரர் மாலயனாதி வானவர்களால் அணுகமுடியாத அதிபயங்கரமான கொடிய விஷத்தை நாவல்பழம் போலத்திரட்டி உருட்டிக்கொணர்ந்து சிவபெருமானிடம் தந்தார். கருணாமூர்த்தியான சிவபெருமான் நந்திதேவரின் கொம்பின் நடுவில் தோன்றி அக்கொடிய விடத்தை அடியவர்களாகிய அமரர்கள் உய்ய அமுதம் போல் உண்டு அருளினார். அந்த விடம் உள்ளே சென்றால் உள்முகத்தில் உள்ள ஆருயிர்கள் அழிந்துவிடும். ஆதலால் உண்ணாமலும், உமிழாமலும் கண்டத்தில் தரித்தருளினார். அதனால் செம்மேனி எம்மானுடைய கண்டம் கரியதாயிற்று. அதனால் மணிகண்டர் என்று பேர் பெற்றார். இது கார்த்திகை மாதச் சனிப்பிரதோஷ காலமாகும். இக்கதை கடம்பவன புராணமென்னும் மதுரை ஸ்தல புராணத்தில் உள்ளதாகும்.


சிவபெருமானுடைய கருணைக்கு உதாரணம் இது ஒன்று போதாதா? என்று நாலம் வா என்று ஒரு பாடலை ஆதிசங்கரர் சிவானந்தலகரியில் பாடியருளினார். இவ்வாறு எம்பெருமான் நஞ்சுண்டருளிய கருணைத் திறத்தை நால்வர்களும் மற்றைய ஆன்றோர்களும் புகழ்ந்து கூறியிருக்கிறார்கள். இறைவன் ஆலால விஷத்தை உண்ணவில்லையானால் பிரம விஷ்ணு இந்திராதி தேவர்கள் அன்றே மாண்டிருப்பார்கள். எல்லோருடைய கண்டத்தையும் எந்தைபிரான் கண்டந்தீர்த்தது. மாலெங்கே? வேந்தனுயர் வாழ்வெங்கே? இந்திரன் செங்கோலெங்கே? வானோர் குடியெங்கே? கோலஞ் செய் அண்டங்கள் எங்கே? எந்தை பிரான் கண்டமங்கே நீலமுறாக்கால்? என்கிறார் வடலூர் வள்ளலார்.


பரவி வானவர் தானவர் பலரும்கலங்கிட வந்த விடம்வெருள உண்டு கந்தஅருள் என் கொல்? விண்ணவனேகரவின் மாமணி பொன் கொழித்திழிசந்து காரகில் தந்து பம்பை நீர்அருவி வந்தலைக்கும்ஆமாத்தூர் அம்மானே - திருஞானசம்பந்தர்
இந்த விடத்தின் வெம்மையால் திருமால் நீலநிறம் பெற்றார். அதற்கு முன் அவர் வெண்ணிறமுடன் இருந்தார் என்பதைப்பின்வரும் பாடலால் அறிக.
மலை வளர் சிறகு கண்டேன்வாரிதி நன்னீர் கண்டேன்சிலை மதன் உருவு கண்டேன்சிவன் சுத்த களம் கண்டேன்அலை கடல் கடையக் கண்டேன்அயன் சிரம் ஐந்துங் கண்டேன்சிலை எரிஇரு கண் கண்டேன்கொடுத்ததை வாங்கக்கண்டேன்
இந்தக்கருத்தை வலியுறுத்தும் வடமொழிப் பாடல் ஒன்று காண்க.
இந்த்ரம் த்வயஷம் அமந்தபூர்வ முதிதம் பஞ்சானனம் பத்மஜம்வார்திம் சுத்த ஜலம் சிவம் சித களம்லட்சுமிபதிம் பிங்களம்சைலான் பகூகதரான ஹயான பிததாகாமஞ்ச சத்விக்ரகம்சர்வம் த்ருஷ்டம் இதம்மயா ரகுபதேதத்தா பஹாரம் விநா
இவ்வாறு தேவர்கள் பொருட்டு சிவபெருமான் ஆலால விஷத்தை உண்டருளியது ஏகாதசி மாலை நேரமாகும்.


மீண்டும் பாற்கடல் கடைந்தது: சிவபெருமான் தேவர்களை நோக்கி மீண்டும் சென்று திருப்பாற் கடலைக் கடையுமாறு பணித்தருளினார். அமரர்களும் அசுரர்களும் மீண்டும் கடலருகில் சென்று நின்று முன்போலவே கடலைக்கடையத் தொடங்கினார்கள். பாற்கடலிருந்து இலக்குமி, ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துபமணி, சூடாமணி, உச்சைச்ரவம் முதலியன ஒவ்வொன்றாகத் தோன்றின. இலக்குமியைத் திருமால் ஏற்றுக்கொண்டார். ஏனைய பொருட்களை இந்திராதி தேவர்கள் அடைந்தார்கள். ஏகாதசியாகிய அன்று இரவு முழுவதும் உறக்கம் இன்றி பாற்கடலைக் கடைந்தார்கள். மறுநாள், துவாதசியன்று அதிகாலையில் அமிர்தம் தோன்றியது. அதனை, தேவர்கள் பகிர்ந்து உண்டார்கள். அமிர்தம் உண்ட அவர்கள் அந்த மகிழ்ச்சியினால் துவாதசியன்று ஆடியும் பாடியும் பொழுதைப் போக்கினார்கள்.

பிரதோஷம்: மறுநாள் திரயோதசி பதிமூன்றாம் நாள் தேவர்கள் சிவபெருமானை முன்னாலே வணங்காது பொழுது போக்கிய தங்கள் குற்றத்தை உணர்ந்து சிவபெருமானிடம் பணிந்து தங்கள் குற்றத்தை மன்னித்தருளுமாறு வேண்டினார்கள். பரமகருணாநிதியாகிய சிவபெருமான் மகிழ்ந்து தேவர்களுக்கு அருள்புரியத் திருவுளம் கயிலையில் அன்று மாலை (4.30 மணி முதல் 6.00 மணி வரை) பிரதோஷ வேளையில் சிவபெருமான் தம் கையில் டமருகம் ஏந்தி, சூலத்தைச் சுழற்றி, நந்தி தேவரின் இரண்டு கொம்புகளிடையே ஒரு யாமம் நடனமாடினார். தருமதேவதையே நந்தியாக உள்ளார். கலைமகள் வீணை வாசிக்க, திருமகள் பாட, இந்திரன் புல்லாங்குழல் ஊத, பிரமன் தாளமிட, திருமால் மிருதங்கம் வாசிக்க, சிவபெருமான் தாண்டவமாடினார். ஆலகால நஞ்சை, ஆலால சுந்தரர் கையில் எடுத்து வந்து பிரதோஷ வேளையில் நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடை வழியாக ஈசனிடம் கொடுத்தார். அவர் அதை வாங்கி, உண்டு நடனமாடினார். தேவர்கள் அதனைத்தரிசித்து சிவபெருமானைத் துதி செய்து வணங்கினார்கள்.


அது முதல் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் வரும் திரயோதசி திதியில், சூரியன் மறைவதற்கு முன் உள்ள நேரமாகிய மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உள்ள பிரதோஷ நேரம் பாபத்தைப்போக்கும் நேரமாயிற்று. அமிர்தம் வேண்டி அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால நஞ்சு தோன்றி அனைவருக்கும் பெருந்தொல்லை உண்டாக்கிய காலம். சிவன் அதை உண்டு, ஒருவருக்கும் தீங்கு ஏற்படாது காப்பாற்றிய காலம். சகல தேவதைகளும் சிவசந்நிதியில் கூடி, ஈசனை வழிபடும் காலம். தங்களைக் காக்க எல்லாரும் ஈசனை வேண்ட, அவர்கள் துன்பம் நீங்கி மகிழ, சிவபெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய காலம்.ஈசனை வழிபட மிகச் சிறந்த காலம் பிரதோஷ காலம்.


சிவன் ஆலால விஷத்தை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் சனிப்பிரதோஷம் என மிகவும் சிறப்புடையதாகும்.


தோஷம் என்றால் குற்றம்; பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது என்று பொருள். எனவே, குற்றமற்ற இந்தப் பொழுதில் இறைவனை வழிபடுவதால் நம்முடைய தோஷங்கள் நீங்கும் என்றும் ஆன்றோர்கள் கூறுவர். இரவும் பகலும் சந்திக்கும் நேரத்துக்கு உஷத் காலம் என்று பெயர். இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவி உஷாதேவி. அதேபோல் பகலும் இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யுஷத் காலம் இதன் அதிதேவதை, சூரியனின் மற்றொரு தேவியாகிய பிரத்யுஷா. அவள் பெயரால் இது பிரத்யுஷத் காலம் எனப்பட்டு, பேச்சுவழக்கில் பிரதோஷ காலம் ஆனதாகச் சொல்வர்.


பிரதோஷ விரதம்: பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய பலவித விரதங்களில் முக்கியமானது.இவ்விரதத்தை அனுஷ்டிப்போர் துன்பங்களில் நின்றும் நீங்கி இன்பத்தை எய்துவர். பிரதோஷ நேரத்தில் கடவுளை நினைத்துக் கொண்டால், கேட்ட கோரிக்கை பலிக்கும் என்பது நம்பிக்கை. அலுவலகத்தில், பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில், ஒரு விநாடி தங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்வது நல்லது.


ஐந்து வகைப் பிரதோஷம் : 1. நித்தியப் பிரதோஷம்: தினமும் சூரிய அஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைக்கு (72 நிமிடம்) முன்னர் உள்ள காலகட்டத்தை இது குறிக்கும்.
2. பட்சப் பிரதோஷம்: இது வளர்பிறைத் திரயோதசியன்று வரும்.
3. மாதப் பிரதோஷம்: இது தேய்பிறைத் திரயோதசி யன்று வரும்.
4. மகா பிரதோஷம்: சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் சனிக்கிழமை கூடிய திரயோதசி நாளன்று இது வரும். (ஆலகால நஞ்சை ஈசன் ஏற்றருளியது கார்த்திகை மாதம் சனிப் பிரதோஷத்தன்று என்று கருதப்படுகிறது. இதற்கு மாறாக, ஆந்திராவில் வைகாசி மாதம் சனிப் பிரதோஷ வேளையென்று கருதுகிறார்கள்.)
5. பிரளயப் பிரதோஷம்: இது பிரளய காலத்தில் வருவது. அப்போது எல்லாமே ஈசனுள் அடங்கும்.


பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி?

பிரதோஷ வேளையில் ஈசனை வழிபட அனைத்தும் சித்திக்கும். இக்காலத்தில் நந்தி தேவரை வழிபடுவது சிறப்பாகும். வலம் வருதல் : சாதாரண நாளில் சிவ சந்நிதியை மூன்று முறை வலம்வர வேண்டும். ஆனால் பிரதோஷ காலத்தில், சோம சூத்திரப் பிரதட்சணம் செய்ய வேண்டும் சோமசூத்தகப் பிரதட்சிணம் என்பது முதலில் சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்கிக் கொண்டு அப்பிரதட்சணமாக (தட்சிணாமூர்த்தி சன்னதி வழியாக) சண்டேசுவரர் சன்னதி வரை சென்று அவரை வணங்கிக் கொண்டு, அப்படியே திரும்பி வந்து, முன்போல் சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்கிக் கொண்டு, வழக்கம் போல் அப்பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வரவேண்டும். அப்படி வலம் வரும் பொழுது சுவாமி அபிஷேக தீர்த்தம் வரும் தொட்டியை (கோமுகத்தை) கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி, அப்பிரதட்சணமாக சன்னதிக்கு வந்து சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்க வேண்டும். இப்படி மூன்று முறை வரவேண்டும். இது அநேக அசுவமேதயாகம் செய்த பலனைத் தரும் என சான்றோர் கூறியுள்ளனர். அந்தந்த திசாபுத்திகள் நடைபெறுபவர்கள் அந்தந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தன்று இறைவனை இவ்வாறு வலம் வருவதால் இன்னல்கள் நீங்கி நன்மைகள் பெறுவர்.


பிரதோஷம் விளக்கும் கோட்பாடு: உலகில் பிரதிகூலமாக இருப்பவைகளை அனுகூலமாக மாற்றத் தெரிந்து கொள்ள வேண்டும். அழிவைத் தரும் ஆலகால நஞ்சையுண்டு நம்மைக்காத்த சிவதாண்டவம் இக்கோட்பாட்டை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. பிரதோஷ காலத்தில், சிவனை வழிபட்டு, இம்மை மறுமை நலன்களை நாமெல்லோரும் பெறுவோமாக !

விரதம் அனுஷ்டிக்கும் முறை: வளர்பிறை தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று அதிகாலையில் எழுந்து நீராடி நித்தியக் கடன்களை முடிக்கவேண்டும். சிவாலயம் சென்று வழிபடவேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்கவேண்டும். திருமுறைகளை ஓத வேண்டும். பிரதோஷநேரம் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை. இந்நேரத்தில் சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாயநம) ஓதி வழிபட வேண்டும். வசதி உள்ளவர்கள் சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தல் அவசியமாகும்.

நந்திதேவர் துதி
நந்திஎம் பெருமான்தன்னை நாள்தோறும் வழிப்பட்டால்புந்தியில் ஞானம் சேரும் புகழ்கல்வி தேடிவரும்இவ்வுலக இன்பம்யாவும் இவரடி தொழ உண்டு!அவ்வுலக அருளும்கூட அவர்துதி பாட உண்டு!முற்பிறவி வினைகள்யாவும் தீயிட்ட மெழுகாகும்நந்தியின் பார்வை பட நலங்கள்உடன் கிட்டும்!ஈசனுக்கு எதிர் அமர்ந்து இறைஊஞ்சல் ஆட்டுவிக்கும்நந்தீசர் நற்பாதம் நாம் தொழுவோமே!
நலந்தரும் நந்தி
கந்தனின் தந்தையைத் தான் கவனமாய்ச் சுமந்து செல்வாய்நந்தனார் வணங்குதற்கு நடையினில் விலகி நின்றாய்அந்தமாய் ஆதியாகி அகிலத்தைக் காக்க வந்தாய்நந்தியே உனைத்துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்ஒன்பது கோள்களுக்கும் உயரிய பலன் கொடுப்பாய்பொன் பொருள் குவிய வைப்பாய் புகழையும் வளர்த்து வைப்பாய்
சிந்தனை வளங்கொடுப்பாய் சிகரத்தில் தூக்கி வைப்பாய்நந்தியே உனைத்துதித்தேன் நாடிவந்தெம்மைக் காப்பாய்மாலைகள் ஏற்க வைப்பாய் மழலைகள் பிறக்க வைப்பாய்வேலைகள் கிடைக்க வைப்பாய் விதியையும் மாற்றி வைப்பாய்
சோலையின் வண்ணப்பூவைச் சூடிடும் நந்தி தேவாநாளும் நான் உனைத் துதித்தேன் நாடி வந்தெம்மைக்காப்பாய்தஞ்சையில் பெரிய நந்தி தளிருடல் வெண்ணை சாத்திஅஞ்சாத வேந்தன் நந்தி அழகிய நெகமம் நந்திகுஞ்சர முகத்தான் தந்தை குந்திடும் ரிஷப நந்திதஞ்சமாம் உனையடைந்தேன் தயங்காது எம்மைக் காப்பாய்
நலம் சேர்க்கும் நந்தீஸ்வரர்
சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்திசேவித்த பக்தர்களைக் காக்கும் நந்திகவலைகளை எந்நாளும் போக்கும் நந்திகைலையிலே நடம்புரியும் கனிந்த நந்தி
பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்திபார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்திநல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்திநாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்தி
செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்திசிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்திமங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்திமனிதர்களின் துயர் போக்க வந்த நந்தி
அருகம்புல் மாலையையும் அணியும் நந்திஅரியதொரு வில்வமே ஏற்ற நந்திவரும் காலம் நலமாக வைக்கும் நந்திவணங்குகிறோம் எமைக்காக்க வருக நந்தி
பிரதோஷ காலத்தில் பேசும் நந்திபேரருளை மாந்தருக்கு வழங்கும் நந்திவரலாறு படைத்து வரும் வல்ல நந்திவறுமையினைஎந்நாளும் அகற்றும் நந்தி
கெட்டகனா அத்தனையும் மாற்றும் நந்திகீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்திவெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்திவிதியினைத்தான் மாற்றிட விளையும் நந்தி
வேந்தன் நகர் செய்யினிலே குளிக்கும் நந்திவியக்க வைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்திசேர்ந்த திருப்புன்கூரிலே சாய்ந்த நந்திசெவி சாய்த்து அருள் கொடுக்கும் செல்வ நந்தி
கும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்திகுடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்திபொன் பொருளை வழங்கிடவே வந்த நந்திபுகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி
நாட்டமுள்ள நந்தி
நந்தியிது நந்தியிது நாட்டமுள்ள நந்தியிதுநந்தனுக்கு நலம்புரிந்த நலமான நந்தியிதுசெந்தூரப் பொட்டுவைத்து சிலிர்த்துவரும் நந்தியிதுசிந்தையில் நினைப்பவர்க்குச்செல்வம்தரும் நந்தியிது (நந்தி)
தில்லையில் நடனமாடும் திவயநாதன் நந்தியிதுஎல்லையில்லா இன்பம்தரும் எம்பெருமான் நந்தியிதுஒற்றை மாடோட்டியெனும் உலகநாதன் நந்தியிதுவெற்றிமேல் வெற்றிதரும் வேந்தன்நகர் நந்தியிது
பச்சைக்கிளி பார்வதியாள் பவனிவரும் நந்தியிதுபார்ப்பவர்க்குப்பலன்கொடுக்கும் பட்சமுள்ள நந்தியிதுசங்கம் முழங்குவரும் சங்கரனின் நந்தியிதுஎங்கும் புகழ்மணக்கும் எழிலான நந்தியிது (நந்தி)
கொற்றவன் வளர்த்துவந்த கொடும்பாளுர் நந்தியிதுநற்றவர் பாக்கியத்தால் நமக்குவந்த நந்தியிதுநெய்யிலே குளித்துவரும் நேர்மையுள்ள நந்தியிதுஈஎறும்பு அணுகாமல் இறைவன்வரும் நந்தியிது (நந்தி)
வானவரும் தானவரும் வணங்குகின்ற நந்தியிதுகாணவரும் அடியவர்க்கும் கருணைகாட்டும் நந்தியிதுஉலகத்தார் போற்றுகின்ற உத்தமனின் நந்தியிதுநகரத்தை வளர்த்துவரும் நான் மறையின் நந்தியிது (நந்தி)
நந்திதேவர் வணக்கம்
(ஆடுக ஊஞ்சல் ஆடுகவே என்ற மெட்டு)
வழிவிடு நந்தி வழிவிடுவேவாழ்வில் நாங்கள் வளர்ந்துயரவழிவிடு நந்தி ! வழிவிடுவேவையகம் வளர வழிவிடுவே. (வழிவிடு)
எம்பிரான் சிவனைச் சுமப்பவனேஎல்லா நலனும் தருபவனேஏழைகள் வாழ்வில் இருளகலஎன்றும் அருளைச் சுரப்பவனே. (வழிவிடு)
நீரில் என்றும் குளிப்பவனேநெய்யில் என்றும் மகிழ்பவனேபொய்யில்லாத வாழ்வு தரபொங்கும் கருணை வாரிதியே. (வழிவிடு)
உந்தன் கொம்பு இரண்டிடையேஉமையாள் பாகன் காட்சிதரதேவர் எல்லாம் அருள் பெற்றார்தேனாய் இனிக்கும் செய்தி அப்பா. (வழிவிடு)
தேடிய பலனைத் தந்திடுவாய்தேவர் போற்றும் நந்திதேவா !வாழ்வில் வளமே வந்துயரவழியே காட்டி அமைந்திடுவாய். (வழிவிடு)
நந்தனார் போற்றும் நந்தி தேவா !நாலுந் தெரிந்த வல்லவனேஎம்பிரான் அருளை எமக்கருளஎன்றுந் துணையாய் நிற்பவனே. (வழிவிடு)
பிரதோஷம் என்றால் உன் மகிமைபெரிதும் வெளியில் தெரிந்திடுமேதேவர்க்குக் காட்சி உன்மூலம்தெரியச் செய்த பெரியவனே. (வழிவிடு)
நலம்தரும் நந்தி
பிரதோஷ காலத்தில் பேசும் நந்திபேரருளை மாந்தர்க்கு வழங்கும் நந்திவரலாறு படைத்து வரும் வல்ல நந்திவறுமையினை எந்நாளும் அகற்றும் நந்தி.
கும்பிட்ட பக்தர்துயர் நீக்கும் நந்திகுடங்குடமாய் அபிஷேகம் பார்த்த நந்திபொன்பொருளை வழங்கிடவே வந்த நந்திபுகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி.
ஈஸ்வர தியானம்
நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய நம ஓம்பவாய குண சம்பவாய சிவதாண்டவாய நம ஓம்.
சிவாய நம ஓம் சிவாய நம:சிவாய நம ஓம் நமசிவாயசிவாய நம ஓம் சிவாய நம:சிவாய நம ஓம் நமசிவாயசிவ சிவ சிவ சிவ சிவாய நம ஓம்ஹர ஹர ஹர ஹர நமசிவாய - சிவாய நமஓம் நமசிவாய ஓம் நமசிவாயஓம் நமசிவாய நமசிவாய - சிவாய நம
ஓம் சிவாய சங்கரா
ஓம் சிவாய நமசிவாய ஓம் சிவாய சங்கராசசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
சுந்தரக் கலாதரனே ஓம் சிவாய சங்கராசசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
கங்கையைத் தரித்தவரே ஓம் சிவாய சங்கராசசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
காசிநாதா விசுவநாதா ஓம் சிவாய சங்கராசசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
பார்வதி மணாளனே ஓம் சிவாய சங்கராசசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஆடும்பாம்பை அணிந்தவனே ஓம் சிவாய சங்கராசசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஆனைமுகம் தந்தையாரே ஓம் சிவாய சங்கராசசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஆறுமுகம் தந்தையாரே ஓம் சிவாய சங்கராசசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஐயப்பன் ஐயனாரே ஓம் சிவாய சங்கராசசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
சிவநாமாவளிகள்
கைலாச வாசா கங்காதராஆனந்தத் தாண்டவ சதாசிவாஹிமகிரி வாசா சாம்பசிவாகணபதி சேவித்ஹே பரமேசாசரவண சேவித்ஹே பரமேசா
சைலகிரீஸ்வர உமா மஹேசாநீலலோசன நடன நடேசாஆனந்தத் தாண்டவ சதாசிவஹிமகிரி வாசா சாம்பசிவா
நாதநாம மகிமை
போலோ நாத உமாபதேசம்போ சங்கர பசுபதேநந்தி வாகன நாக பூஷணசந்திரசேகர ஜடாதராகங்காதார கௌரி மனோகரகிரிஜா ரமணா சதாசிவா (போலோ)
கைலாசவாசா கனகசபேசாகௌரி மனோகர விஸ்வேசாஸ்மாசன வாஸா சிதம்பரேசாநீலகண்ட மஹாதேவா (போலோ)
சூலாதாரா ஜ்யோதிப் பிரகாசாவிபூதி சுந்தர பரமேசாபம் பம் பம் பம் டமருகநாதபார்வதி ரமணா சதாசிவா (போலோ)
நமசிவாய மாலை
ஓம் நமசிவாயஓம் ஓம் நமசிவாயஓம் நமசிவாயஓம் ஓம் நமசிவாய
ஆதியான அஞ்சிலும் அனாதியான நாலிலும்சோதியான மூன்றிலும் சொரூபமற்ற ரெண்டிலும்நீதியான தொன்றிலும் நிறைந்து நின்ற வஸ்துவைஆதியான தொன்றுமே யற்றதஞ் செழுத்துமே
சக்தி நீ தயவு நீ தயங்கு சங்கினோசை நீசித்தி நீ சிவனும் நீ சிவாய மாமெழுத்து நீமுத்தி நீ முதலும் நீ மூவரான தேவர் நீஅத்திபுர மும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே
ஆறு நாடு தேடினும் ஆனை சேனைதேடினும்கோடிவாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோஓடி இட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும்சாடிவிட்ட குதிரைபோல் தர்மம் வந்து நிற்குமே
கண்ணிலே இருப்பவனே கருங்கடல் கடந்துமால்விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனேதன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன்என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே
அண்டமேழு முழலவே யனிந்தயோனி யுழலவேபண்டு மாலயனுடன் பரந்து நின்றுழலவேஎண்டிசை கடந்து நின்றிருண்ட சக்தியுழலவேஅண்டரண்ட மொன்றதாய் ஆதி நடமாடுமே
அகார காரணத்திலே யனேகனேக ரூபமாய்உகார காரணத்திலே யுருத்தரித்து நின்றனன்மகார காரணத்திலே மயங்குநின்ற வையகம்சிகார காரணத்திலே தெளிந்ததே சிவாயமே
பூவும் நீரும் என்மனம் பொருதுகோயில் என்னுளம்ஆவியோடு லிங்கமா யகண்ட மெங்குமாகிலும்மேவுகின்ற ஐவரும் விளங்கு தீப தீபமாய்ஆடுகின்ற கூத்தனுக்கோர் அந்தி சந்தியில்லையே
ஒன்று மொன்று மொன்றுமே யுலகனைத்து மொன்றுமேஅன்று மின்று மொன்றுமே அனாதியான தொன்றுமேகன்றல் நின்ற செம்பொனைக் களிம்பறுத்து நாட்டினால்அன்று தெய்வ மும்முள அறிந்ததே சிவாயமே
ஐயன் வந்து மெய்யகம் புகுந்தவாற தெங்கனேசெய்ய திங்களங்குரும்பை நீர்புகுந்த வண்ணமேஐயன்வந்து மெய்யகம் புகுந்து கோவில்கொண்டபின்வையகத்தில் மாந்தரோடு வாய் திறப்பதில்லையே
ஆதியுண்டு அந்தமில்லை யன்று நாலு வேதமில்லைஜோதியுண்டு சொல்லுமில்லை சொல்லிறந்ததேதுமில்லைஆதியான மூவரில் அமர்ந்திருந்த வாயுவும்ஆதியன்று தன்னையும் யாரறிவாரண்ணலே
மூன்று மூன்று மூன்றுமே மூவர் தேவர் தேடிடும்மூன்று மஞ்செழுத்துமாய் முழங்கு மவ்வெழுத்துளேஈன்ற தாயும் அப்பரும் இயங்குகின்ற நாதமும்தோன்று மண்டலத்திலே சொல்ல வெங்குதில்லையே
கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல்ஞானமற்ற நெஞ்சகத்தில் வல்லதேது மில்லையேஊனமுற்ற ஜோதியோடு உணர்வு சேர்த்தடக்கினால்தேனதத்தினூரல் போல் தெளிந்ததே சிவாயமே
தங்கமொன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்செங்கண்மாலு மீசனும் சிறந்திருந்த தெம்முளேவிங்களங்கள் பேசுவாய் விளங்குகின்ற மாந்தரேஎங்குமாகி நின்ற நாமம் நாமறிந்த நாமமே
தாய் தந்தை குருவும் நீ சகல தேவகணங்கள் நீசிந்தை நீ தெளிவும் நீ சித்தி முக்தி தானும் நீவிந்தும் நீ வினையும் நீ மேலதாய வேதம் நீஎந்தை நீ இறைவன் நீ என்னையாண்ட ஈசன் நீ
சித்தமற்று சிந்தையற்று சீவனற்று நின்றிடம்சக்தியற்று சம்புவற்று ஜாதி பேதமற்றுநன்முக்தியற்று மூலமற்று மூல மந்திரங்களும்வித்தை யித்தை யீன்றவிதத்தில் விளைந்ததே சிவாயமே
நல்லதல்ல கெட்டதல்ல நடுவில் நின்றதொன்றுதான்நல்லதென்ற போது நல்லதாகி நின்றபின்நல்லதல்ல கெட்டதென்றால் கெட்டதாகுமாதலால்நல்லதொன்று நாடிநின்று நாமஞ் சொல்லவேண்டுமே
பார்த்து நின்ற தம்பலம் பரமனாடுந் தம்பலம்கூத்து நின்ற தம்பலம் கோரமான தம்பலம்வார்த்தையான தம்பலம் வன்னியான தம்பலம்சீற்றமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே
விண்ணினின்று மின்னெழுந்து மின்னோடுங்குவாறு போல்எண்ணுள் நின்று எண்ணுமீசன் என்னகத்திருக்கையால்கண்ணினின்று கண்ணில் தோன்றும் கண்ணறி விலாமையால்எண்ணுள்நின்ற என்னையும் நானறிந்ததில்லையே
உருக்கலந்த பின்னலோ வுன்னை நானறிந்ததும்இருக்கிலென் மறக்கிலென் இணைந்திருந்தபோதெல்லாம்உருக்கலந்து நின்றபோது நீயும் நானும் ஒன்றலோதிருக்கலந்த போதலோ தெளிந்ததே சிவாயமே
சிவாய வென்ற வக்ஷரம் சிவனிருக்கு மக்ஷரம்உபாய மென்று நம்புதற்கு உண்மையான வக்ஷரம்கபாடமற்ற வாசலைக்கடந்து போன வாயுவைஉபாய மிட்டழைத்துமே சிவாய வஞ்செழுத்துமே
சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து தேவராகலாம்சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து வானமாவலாம்சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து கொண்டவான் பொருள்சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து கொள்ளுமுண்மையே
திரு அங்க மாலை
தலையே நீ வணங்காய் - தலைமாலை தலைக்கணிந்துதலையாலே பலி தேருந் தலைவனைத்தலையே நீ வணங்காய்.
கண்காள் காண்மின்களோ - கடல்நஞ்சுண்ட கண்டன் தன்னைஎண்டோள் வீசி நின்றாடும் பிரான்தன்னைக்கண்காள் காண்மின்களோ.
செவிகாள் கேண்மின்களோ - சிவன்எம்மிறை செம்பவளஎரிபோல் மேனிப் பிரான் திறமெப்போதுஞ்செவிகாள் கேண்மின்களோ
மூக்கே நீமுரலாய் - முதுகாடுறை முக்கணனைவாக்கே நோக்கிய மங்கை மணாளனைமூக்கே நீ முரலாய்.
வாயே வாழ்த்து கண்டாய் - மதயானையுரி போர்த்துப்பேய் வாழ் காட்டகத்தாடும் பிரான்தன்னைவாயே வாழ்த்துகண்டாய்
நெஞ்சே நீ நினையாய் - நிமிர்புன்சடை நின்மலனைமஞ்சாடும் மலைமங்கை மணாளனைநெஞ்சே நீ நினைவாய்
கைகாள் கூப்பித்தொழீர் - கடிமாமலர் தூவி நின்றுபைவாய்ப் பாம்பரை ஆர்த்த பரமனைக்கைகாள் கூப்பித் தொழீர்.
ஆக்கையால் பயனென் - அரன்கோயில் வலம்வந்துபூக்கை யால் அட்டிப் போற்றியெண்ணாத இவ்ஆக்கையாற் பயனென்
கால் களாற் பயனென் - கறைக்கண்டனுறை கோயில்கோலக் கோபுரக் கோகரணஞ் சூழாக்கால்களாற் பயனென்
உற்றார் ஆருளரோ - உயிர்கொண்டு போகும்பொழுதுகுற்றாலத்துறை கூத்தனல்லால்நமக்குற்றா ராருளரோ.
இறு மாந்திருப்பன் கொலோ - ஈசன்பல் கணத்து எண்ணப்பட்டுச்சிறுமானேந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்றங்குஇறுமாந்திருப்பன் கொலோ.
தேடிக் கண்டுகொண்டேன் - திருமாலொடு நான்முகனும்தேடித் தேடொணாத் தேவனைஎன்னுளே தேடிக் கண்டுகொண்டேன்.
திருச்சிற்றம்பலம்
நமச்சிவாயத் திருப்பதிகம்
சொற்றுணை வேதியன் சோதிவானவன்பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்நற்றுணை யாவது நமச்சி வாயவே
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரைஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்கோவினுக் கருங்கலம் கோட்ட மில்லதுநாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தைநண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே
இடுக்கண்பட் டிருக்கினும் இரந்து யாரையும்விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாம்உற்றநடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே
வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்அந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கம்திங்களுக் கருங்கலம் திகழு நீண்முடிநங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்நலமிலன் நாடொறும் நல்கு வான்நலன்குலமில ராகிலும் குலத்துக் கேற்பதோர்நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்கூடினார் அந்நெறி கூடிச் சென்றாலும்ஓடினேன் ஓடிச் சென் றுருவங் காண்டலும்நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே
இல்லக விளக்கது இருள் கெடுப்பதுசொல்லக விளக்கது சோதி உள்ளதுபல்லக விளக்கது பலரும் காண்பதுநல்லக விளக்கது நமச்சி வாயவே
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்தன்னெறி யேசர ணாதல் திண்ணமேஅந்நெறியே சென்றங் கடைந்தவர்க் கெல்லாம்நன்னெறியாவது நமச்சி வாயவே
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழநாப்பிணை தழுவிய நமச்சிவாயபத்துஏத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
திருச்சிற்றம்பலம்

சிவவாக்கியர் பாடல்

ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாயஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய

சரியை விலக்கல்

1. ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியைநாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (ஓம்)
2. என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையேஎன்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின்என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோஎன்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டவனே (ஓம்)
இதுவுமது
3. நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடாகோனதேது குருவதேது கூறிடும் குலாமரேஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்ஈனதேது ராம ராம ராமவென்ற நாமமே (ஓம்)
யோக நிலை
4. அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்துஅஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்துகூற வல்லரேல்அஞ்சல் அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே. (ஓம்)
விராட் சொரூபம்
5. இடதுகண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்இடக்கை சங்குசக்கரம் வலக்கை சூலமானமழுஎடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும் அப்புறம்உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே (ஓம்)
தெய்வ சொரூபம்
6. உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றைமேவி நின்றதல்லமருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்லபெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்லஅரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே (ஓம்)
தேகநிலை
7. மண்கலங் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்வெண்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்நண்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்எண்கலந்து நின்றமாயம் என்ன மாய மீசனே (ஓம்)
அட்சர நிலை
8. ஆனவஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்ஆனவஞ் செழுத்துளே ஆதியான மூவரும்ஆனவஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்ஆனவஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே (ஓம்)
இதுவுமது
9. நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலைநினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாய்கையைஅனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாறு எங்ஙனே (ஓம்)
ஞானநிலை
10. பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனைபாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனைமிண்டராய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனைமீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை (ஓம்)
ஞானம்
11. அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோகம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோஇன்பமற்ற யோகியை இருளும்வந் தணுகுமோசெம்பொன் னம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே (ஓம்)
அட்சர நிலை
12. அவ்வெனும் எழுத்தினால் அகண்டம் ஏழுமாகினாய்உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனைமவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே (ஓம்)
பிரணவம்
13. மூன்று மண்டலத்திலும் முட்டுநின்ற தூணிலும்நான்றபாம்பின் வாயினும் நவின்றெழுந்த அட்சரம்ஈன்றதாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம்தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதிலையே (ஓம்) பஞ்சாட்சர மகிமை
14. நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளும் நமச்சிவாய மஞ்சுதஞ்சும்பு ராணமான மாய்கையை நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முள்ளே இருக்கவேநமச்சிவாய உண்மையை நன்குரை செய்நாதனே (ஓம்)
கடவுளின் உண்மை கூறல்
15. இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள்இல்லையென்று நின்றஒன்றை இல்லை என்னலாகுமோஇல்லையல்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதைஎல்லைகண்டு கொண்டோரினிப் பிறப்பதிங் கில்லையே (ஓம்)
இராம நாம மகிமை
16. கார கார கார கார காவல் ஊழிக் காவலன்போர போர போர போர போரில் நின்ற புண்ணியன்மார மார மார மார மரங்கள் ஏழும் எய்தசீராம ராம ராம ராம ராம என்னும் நாமமே (ஓம்)
அத்துவிதம்
17. விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்கண்ணில் ஆணியாகவே கலந்துநின்ற எம்பிரான்மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வதுண்மையே (ஓம்)
அம்பலம்
18. அகாரமான தம

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum