வழிபடுவது எப்படி?
Page 1 of 1
வழிபடுவது எப்படி?
பிரதோஷ நாளில் சிவபெருமான் பிராகாரத்தில் உலா வருகையில் இவருக்கு முதல் சுற்றில் அபிஷேகம் செய்வதும், இரண்டாம் சுற்றின் போது அலங்காரம் செய்து நிவேதனம் செய்வதும், மூன்றாம் சுற்றின்போது உற்சவரை வடக்குநோக்கி நிறுத்தி இவருக்கும் உற்சவருக்கும் ஒரே நேரத்தில் மகாதீபாராதனை செய்ய வேண்டும் என்றும் கூறுவர்.
ஏனென்றால் நஞ்சுண்ட வேளையில் தனது அதிகாரம் முழுவதையும் இறைவன் நந்தியிடம் ஒப்புவித்தார் என்பர். இந்த வேளையில் அறுகம்புல்லை மாலையாகக் கட்டி இவருக்கு சாற்ற வேண்டும். வில்வம், மல்லிகை, மருக்கொழுந்து முதலிய மலர்களாலும் அலங்காரம் செய்வர்.
இவருக்கு காப்பரிசி (பச்சரிசி, பயத்தம் பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து அதனுடன் வெல்லம் கலந்து) நிவேதனம் செய்ய வேண்டும். இந்த வேளையில் மூலவரை நந்தியம் பெருமானின் இருகொம்புகளுக்கு இடையேயுள்ள இடைவெளியின் வழியே கண்டு தரிசிக்கவேண்டும். பெருமான் விடம் உண்டு சயனித்துத் திருவிளையாடல் புருந்த பிறகு எழுந்து அம்பிகை காணுமாறு சந்தியா நிருத்தத்தை மூன்றேமுக்கால் நாழிகை ஆடினார்.
அந்நடனமே பிரதோஷ நடனமாயிற்று. அதனைக் கண்ட நந்தியம் பெருமான் அனந்த நிலை எய்தியதால் தனது உடல் பருத்தார். அதனால் கயிலாயமேமறைக்கப் பெற்றது. இறைவன் ஆடிய அந்த நடனக் காட்சியை தேவர்கள் அவருடைய கொம்புகளுக்கு இடையேயுள்ள வழியினால் மட்டுமே பார்க்கமுடிந்தது.
அதனை நினைவு கூறும்வகையில் நாம் இப்போது நந்தியின் இரண்டு கொம்புகளுக்கு இடையே பெருமானைத் தரிசிக்கிறோம். சிவபூஜையின் பலனைத் தரும் அதிகாரம் சண்டீஸ்வரிடம் உள்ளது.
சிவபூஜையின் இறுதியில் சண்டீஸ்வரரை வணங்கினால் மட்டுமே சிவபூஜையின் பலன் கட்டும். அது போன்றே பிரதோஷ காலத்தில் நந்தியம் பெருமானை வணங்கினால் தான் பிரதோஷ தரிசன பூஜையின் பயன் முழுமையாக கிடைக்கும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி?
» கிருஷ்ணரை வழிபடுவது எப்படி?
» கிருஷ்ணரை வழிபடுவது எப்படி?
» ராகு-கேதுவை வழிபடுவது எப்படி?
» ராகு-கேதுவை வழிபடுவது எப்படி?
» கிருஷ்ணரை வழிபடுவது எப்படி?
» கிருஷ்ணரை வழிபடுவது எப்படி?
» ராகு-கேதுவை வழிபடுவது எப்படி?
» ராகு-கேதுவை வழிபடுவது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum