சிவபெருமானை பூஜிக்கும் மகாசிவராத்திரியின் விரத கதை
Page 1 of 1

கற்பாந்த காலம் என்பது உலக முடிவு காலம் என்பதை குறிக்கும். இதனை ஊழிக்காலம், உகாந்த காலம் என்றும் சொல்வார்கள். உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் இறைவனையும், இறை வழிபாட்டையும் மறந்து, துறந்து, தீயச்செயல்களைச் செய்யத் தொடங்கும்போது, பஞ்சமா பாதகங்களும் தயவு தாட்சண்யம் இன்றி நடைபெறும். இறைவனை மறந்து எதையும் செய்யலாம் என்று மக்கள் நினைக்கும் நிலை உண்டாகும் காலமே உலகத்தின் முடிவு காலமாகும்.
மகா சிவராத்திரி கதை..........
ஒரு முறை இதுபோன்ற ஊழிக்காலத்தின்போது, பிரம்மதேவன் இறந்து போனார். இதையடுத்து ஏற்பட்ட பிரளயத்தில் (வெள்ளப்பெருக்கு) உலக உயிர்கள் அனைத்தும் அழிந்தன. அப்போது ஈசனின் இடப்பாகம் அமர்ந்த அன்னையானவள், சிவபெருமானை வழிபட்டு, அவரின் அருளைப் பெற்றாள். அழிந்துபோன உயிர்கள் அனைத்தும் முக்தியை அடையவேண்டும் என்று அன்னை, சிவனை வேண்டி வரம்பெற்றாள்.
தவம் இருந்து வரம் பெற்ற இரவே மகாசிவராத்திரி என்று கூறப்படுகிறது. மகாசிவராத்திரி அன்று இரவு, சிவபெருமானை நான்கு யாம காலத்திலும் பூஜித்து வழிபட்டால் அவர்கள் முக்தியை அடைவார்கள். இதே போல் மற்றொரு கதையும் மகாசிவராத்திரி தோன்றியதற்கான காரணமாக கூறப்படுகிறது.
படைப்புத் தொழிலை செய்து வந்த பிரம்மாவுக்கு, உலகை சிருஷ்டிக்கும் தன்னை விட உலகில் உயர்ந்தவர் எவரும் இல்லை என்ற எண்ணம் தோன்றியது. அந்த செருக்குடன், வைகுண்டம் சென்ற அவர் மகாவிஷ்ணுவிடம், உலக உயிர்களை தோற்றுவிக்கும் தானே உலகில் சிறந்தவன் என்று கூறினார்.
இதனால் மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மதேவருக் கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு போர் மூண்டது. நூறு வருட காலம் இந்த போர் நடந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஈசன் நெருப்பு பிழம்பாக தோன்றி, எனது அடி, முடியை யார் கண்டு வருகிறார்களோ அவர்களே உலகில் உயர்ந்தவர் என்று கூறினார். அவர் நெருப்பு பிழம்பாக தோன்றி,' திருமாலுக்கும், பிரம்மதேவருக்கும் காட்சி கொடுத்த இரவே மகாசிவராத்திரி என்றும் கூறப்படுகிறது.
விரத முறை..........
மகாசிவராத்திரி அன்று விரதம் இருப்பவர்கள் நிச்சயமாக முக்தியை அடைவார்கள். காலையில் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு, சிவபெருமானை பூஜிக்க வேண்டும். பின்னர் சிவன் கோவில்களுக்குச் சென்று, அங்கு இறைவனுக்கு நடைபெறும் வழிபாடுகளில் கலந்துகொண்டு, சிவ மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.
அன்று இரவு சிவன் கோவில்களில் நடைபெறும் நான்கு கால ஜாம பூஜைகளில் கலந்துகொண்டு, தூக்கமின்றி சிவ மந்திரத்தை பாராயணம் செய்து வர வேண்டும். நான்கு ஜாமம் என்பது மாலை 6 மணி முதல் மறு நாள் காலை 6 மணி வரையான 12 மணி நேரக் காலத்தை குறிக்கும். ஒரு ஜாமம் என்பது 3 மணி நேரம் ஆகும்.
நான்கு சாம பூஜை என்பது மனம், புத்தி, சித்தம், அகங்காரம் போன்றவற்றை இறைவனின் காலடியில் சமர்ப்பணம் செய்வதை குறிக்கின்றன. மறுநாள் காலையில் புனித நீராடி, இயன்றவரை அன்னதானம் செய்ய வேண்டும். அன்றைய தினம் பகல் முழுவதும் சிவபுராணத்தை படித்தோ, அல்லது கேட்டோ இறைவனையே எண்ணி இருக்க வேண்டும். மாலையில் வீட்டில் பூஜை செய்து பால், பழம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.
விரத பலன்.......... மகத்துவம் நிறைந்த இந்த மகாசிவராத்திரி விரதத்தை முறைப்படி செய்பவர்கள் முக்தியை எய்துவர். இந்த விரதத்தை 24 ஆண்டுகள் செய்து வரவேண்டும். அவ்வாறு முடியாதவர்கள் 12 ஆண்டுகளாவது தொடர்ந்து அனுஷ்டிக்க வேண்டும். இதனால் விரதம் இருப்பவர்கள் முக்தியை அடைவதுட

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிவபெருமானை பூஜிக்கும் மகாசிவராத்திரியின் விரத கதை

» நட்சத்திரங்கள் பூஜிக்கும் நாயகன்
» பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி?
» சூல விரத மகிமை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum