நவரத்தின மோதிரங்கள்--- யார், எப்படி அணியவேண்டும்...?
Page 1 of 1
நவரத்தின மோதிரங்கள்--- யார், எப்படி அணியவேண்டும்...?
செவ்வாய் ஆதிக்கம் உள்ளவர்கள்தான் நவரத்தினம் அணிய வேண்டும் என்பது பெரும்பான்மையினர் கருத்து.மேலும் நவரத்தினங்களை வாங்கி சில நாட்கள் தன்னுடன் வைத்திருந்து பரீட்சித்து பார்த்து அணிந்து கொள்வது நலம்.நவரத்தின மோதிரம் அணிந்து சிலருக்கு காய்ச்சல்,தலைவலி ஏற்படலாம். பொதுவாக ஓபன் செட்டிங்கில் அணிவது பலன்தரும்.தங்கத்தில் மட்டுமே பதித்து அணிய வேண்டும்.இரத்தின நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்குவது நல்லது.
பதிக்கும் முறை
மோதிரத்தின் நடுவில் சூரியனுக்குரிய மாணிக்கத்தை வைத்து அதன் கிழக்குபக்கம் வைரம் பதிக்க வேண்டும்.பிறகு கடிகார சுற்றுபடி முத்து,பவளம்,கோமேதகம்,நீலம்,வைடூரியம்,புஷ்பராகம் மரகதம் ஆகியவற்றை வரிசையாய் பதிக்க வேண்டும்.
நவரத்தினங்கள் தரும் நற்பலன்கள்
நவரத்தின மோதிரம் ஒருவருக்கு பொருந்திவிட்டால் அவர் மிக சிறந்த அதிஷ்ட சாலிதான். பெரும் சாதனைகள் படைக்கலாம்.எதிலும் வெற்றிகிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி,புகழ்,செல்வாக்கு அனைத்தும் கிடைக்கும்.போடும் திட்டங்கள் எல்லாம் சரியானதாக இருக்கும்.உழைப்பிற்க்கு முழுமையான வெற்றி கிடைக்கும்.
யாரெல்லாம் நவரத்தின மோதிரம் அணியலாம் ...?
மேஷ ராசி,மேஷ லக்னம் மற்றும் விருச்சிக ராசி, விருச்சிக லக்னகாரர்கள்
மிருகசீரிஷம்,அவிட்டம், சித்திரை ஆகிய செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அணியலாம். ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம் .
எண் கணித படி 9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதியின் கூட்டு எண் 9 வருபவர்களும் அணியலாம்.
பிறவி எண் 2,7 கொண்டவர்கள் நவரத்தின மோதிரம் அணிய கூடாது. வேறு எந்த வகையிலாவது நவரத்தின மோதியம் அணியலாம் என்ற நிலை இருப்பின் ரத்தினங்களை வாங்கி தன்னுடன் வைத்திருந்து சோதித்து பார்த்துதான் அணிய வேண்டும்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நவரத்தின வகை
» சுவாமிமலை நவரத்தின மாலை
» நவரத்தின காய்கனி சாலட்
» ஃபேஷியல் செய்து கொள்ளக்கூடாதவர்கள் யார் யார் தெரியுமா?
» ‘வேலாயுதம்’ படத்தில் மூன்று முக்கிய வில்லன்கள் யார் யார்?
» சுவாமிமலை நவரத்தின மாலை
» நவரத்தின காய்கனி சாலட்
» ஃபேஷியல் செய்து கொள்ளக்கூடாதவர்கள் யார் யார் தெரியுமா?
» ‘வேலாயுதம்’ படத்தில் மூன்று முக்கிய வில்லன்கள் யார் யார்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum