நவரத்தின காய்கனி சாலட்
Page 1 of 1
நவரத்தின காய்கனி சாலட்
நார்ச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள், புரதச்சத்து அனைத்தும் நிரம்பியது காய்கனி சாலட். பலவித வண்ணங்களில் கண்ணுக்கு விருந்தாகவும் இது அமையும். அத்துடன் ஆரோக்கியத்திற்கு உகந்த போஷாக்கு அளிக்கும். நாவிற்கு சுவையாகவும், புத்துணர்ச்சி மற்றும் சக்தி நல்குவதாகவும் இருக்கும்.
நம் சருமத்தை பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும், அழகாகவும் வைக்க வல்லது நவரத்ன காய்கனி சாலட். டயட்டில் இருப்போர் இந்த காய்கனி- தானிய சாலட் உட்கொண்டால் அயர்ச்சி அடையாமல் இருப்பதுடன், வயிறு நிரம்பிய உணர்வும் உண்டாகும். பல நன்மைகளை அளிக்கவல்ல நவரத்தின காய்கனி சாலட்டை மிக சுலபமாக எப்படித் தயாரிப்பது என்று பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
கேரட் - 1
வெங்காயம் - 1
தக்காளி - 1
வெள்ளரிப் பிஞ்சு - 1
எலுமிச்சம் பழம் - 1
பப்பாளி - 8 துண்டுகள்
ஆப்பிள் - 8 துண்டுகள்
வாழைப்பழம் - 8 துண்டுகள்
மாதுளை முத்துக்கள் - 1 டீஸ்பூன்
வெள்ளைச் சென்னா, கடலை, காராமணி (ஊறவைத்து வேக வைத்தது) - 4 டேபிள் ஸ்பூன்
முளைகட்டிய பச்சைப்பயறு - 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
கறுப்பு மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
சாட் மசாலாத் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* வெங்காயம், தக்காளி, வெள்ளரிப் பிஞ்சை பொடிப்பொடியாக நறுக்கவும்.
* கேரட்டை துருவிக் கொள்ளவும்.
* எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து, அதில் அனைத்துப் பழத்துண்டுகள், நறுக்கிய காய்கள், துருவிய கேரட், வேக வைத்த தானியங்கள், முளைவிட்ட பயறு, உப்பு, மிளகுத்தூள், சாட் மசாலாத் தூள் சேர்த்து நன்கு குலுக்கி கலக்கவும்.
* காய்கனி தானிய சாலட் பரிமாற தயார்.
குறிப்பு:
* சாட் மசாலாத் தூள், ரெடியாக சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்.
* தானிய வகைகளை ஊறவைத்து பிரஷர் குக்கரில் வேக வைத்து உபயோகிக்கவும்.
* பயிறைத் தண்ணீரில் 8 மணி நேரம் ஊற வைத்து, ஒரு மெல்லிய துணியில் கட்டித் தொங்கவிட்டு துணி காய்ந்த நேரங்களில் தண்ணீர் தெளித்தால் 20 மணி நேரத்தில் முளைகட்டிவிடும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நவரத்தின வகை
» கிர்ணிப்பழ சாலட் கிர்ணிப்பழ சாலட்
» அவல் சாலட் அவல் சாலட்
» திருவள்ளுவ நாயனார் நவரத்தின வைத்திய சிந்தாமணி-800
» நவரத்தின மோதிரங்கள்--- யார், எப்படி அணியவேண்டும்...?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum