தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நவரத்தின வகை

Go down

நவரத்தின வகை Empty நவரத்தின வகை

Post  oviya Sun Feb 10, 2013 4:30 pm

மாணிக்கம்:

சரீராதி சுரங்கள், சந்நிபாத தோஷங்கள், திரி தோஷ்ங்கள், வாத பிரமேகம், கண் நோய்கள் ஆகியவை தீரும். வசீகரம் உண்டாகும்.

வைரம்:

ஆறு வைரங்கள் உள்ளன. அவற்றில் மகாரசங்கள் நீங்கும். உடலுக்கு அழகை உண்டாக்கும்.

வைடூரியம்:

சிலேஷ்ம வாத நோய்கள், கபம், புளிப்யேப்பம், வருத்துகின்ற கீல்பிடிப்பு, வாதம், மனச்சோர்வு மூளைச்சோர்வு ஆகியவை நீங்கும்.

கோமேதகம்:

பித்த மிஸ்ரம், மலபந்தம், சுரத்தால் பிறந்த துர்குணங்கள் ஆகியவற்றை நீக்கும். பளபளப்பை தரும்.

புஷ்பராகம்:

விந்து விருத்தியும், நல்லறிவும், கீர்த்தியும் உண்டாகும். மேகம் முதலான நோய்கள் நீங்கும்.

பவளம்:

சூட்சையின் விகாரம், கபம், சந்நிபாத சுரம், இருமல், கீடவிஷம், விந்து கோளாறு, விதாகம், நாவில் சுரசுரப்பு ஆகியவை விலகும். சரீர காந்தி உண்டாகும்.

முத்து:

ஜீவரத்தினம் என்னும் முத்தினால் அஸ்திசுரம், வீக்கம், அரோசகம், மெலிவு, கண் நோய், அக்கினி கீடவிஷம், சுட்க சிலேஷ்மம், குரல் வளையில் சந்திக்கின்ற கோழை, அதைரியம், வீரிய நாசம் ஆகியவை நீங்கும்.

மரகதம்:

இனிப்புள்ள மரகதம் விந்துவை அதிகரிக்க செய்யும். 18 வித பூத பைசாசங்கள் விரணம், விஷங்கள், மதுமேகம் ஆகியவற்றை நீக்கும்.

நீலம்:

குதிகால் வலி, மேகநீர், அதிக பித்தம், பாண்டு, மனச்சோர்வு ஆகியவை போகும். நல்லறிவும், விந்து உற்பத்தியும் அதிகரிக்கும்.
இவை அனைத்தும் நவரத்தின வகைகள் மற்றும் அவற்றின் குணங்கள் ஆகும். இவற்றை அறிந்து கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum