தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செடியின் கிழங்கு வகை

Go down

செடியின் கிழங்கு வகை Empty செடியின் கிழங்கு வகை

Post  oviya Fri Feb 01, 2013 9:22 pm

மெருகன் கிழங்கு:

மெருகன் கிழங்கு கட்டி, பிரமேகம், வயிற்று நோய், கபரோகம், அஸ்திதாது, கதசுரம், சிலேஷ்மாதிக்கம் ஆகியவற்றை போக்கும். உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்.

அமுக்கிரா கிழங்கு:

கொஞ்சம் துவர்ப்புள்ள அமுக்கிரா கிழங்கினால் ஷயம், வாத சூலை, வாத கரப்பான், பாண்டு, சுரம், வீக்கம், ஜலதோஷம் ஆகியவை போகும். பெண்கள் மேல் இச்சையும், பசியும் உண்டாகும்.

பேதிக்கிழங்கு:

இதனை இரேவல்சின்னி என்றும் கூறுவர்.பேதிக்கிழங்கு விரோசனம், பித்தாதிக்கம், குடல் சுத்தி, வீரிய விருத்தி இவைகளை உண்டாக்கும். வாத கோபத்தை அடக்கும்.

சேவகனார் கிழங்கு:

இது சிலேஷ்ம தோஷத்தையும், காலமில்லாமல் கொல்லுகின்ற விஷத்தையும் போக்கும்.

பூமி சருக்கரைக்கிழங்கு:

பிரமேகம், அதிசுஷ்கம், வெள்ளை வீழல், சுரம், மூலம் ஆகியவற்றை போக்கும். உடல் பூரிக்கும்.

முள்ளங்கி கிழங்கு:

வாத பிணி, கரப்பான், வயிற்று எரிச்சல், குத்தல், குடல் விருத்தி நோய், இருமல், கபம், தலைவலி, நீரேற்றம், பல் நோய், பல் சிலந்தி குன்மம், சுவாசம், மூலக்கடுப்பு ஆகியவை நீங்கும்.

மஞ்சள்:

உடலை பொன்மயமாக்கி, புலால் நாற்றத்தை போக்குகின்ற மஞ்சளினால் புருஷ வசியமும், பசியும் உண்டாகும். வமனம், பித்த கப வாத கோபங்கள், தலைவலி, ஜலதோஷம், பிரமேகம், நாசிகாரோகம், ஐவகைவலி, வீக்கம், வண்டுக்கடி, விஷம், பெருவிரணம் ஆகியவை போகும்.

மரமஞ்சள்:

மரமஞ்சள் மூக்கு கணம், மூலநோய், அரோசகம், கணச்சுரம், உட்சுரம் ஆகியவற்றை அகற்றும்.

கஸ்தூரி மஞ்சள்:

பெருவிரணம், கரப்பான், கிருமி ரோகம், அக்கினி மந்தம் இவை போகும். வீரியமும், அறிவும் வளர்ச்சி அடையும்.

இஞ்சி:

காசம், கபம், வெள்ளோக்காளம், சந்நிபாத சுரம், அதிசாரம், வாத சூலை, வாத கோபம் இவை போகும். பசி உண்டாகும்.

காறுகருணைக்கிழங்கு:

காறுகின்ற கருணைக்கிழங்கு கரப்பான், பொடி சிரங்கு, சொறி, உட்கிரந்தி, மந்தாக்கினி, கபக்கோழை, நமைச்சல் ஆகியவற்றை உண்டாக்கும். மூலரோகத்தை போக்கும்.

காறாக்கருணை கிழங்கு:

சிலேத்தும் ரோகம், வாத நோய், இரத்த மூல முளை, அக்கினி மந்தம் ஆகியவை நீங்கும். பசி உண்டாகும்.

காட்டு கருணை கிழங்கு:

வாதம், பிரமேகம், முளை மூலம், சுரதோஷமும் நீங்கும். அதிகமான பசியும், கரப்பானும் உண்டாகும்.

சேம்புக்கிழங்கு:

வாத கப தோஷங்களையுடைய சேம்பு கிழங்குகளுக்கு தொண்டையில் கோழை கட்டும். நல்ல மருந்தின் குணமும் கெடும்.

பிரப்பங்கிழங்கு:

பிரப்பங்கிழங்கானது தந்த மூல ரோகம், வாத கோபம், கீல் பிடிப்பு, சிலேத்ம தோஷம் ஆகியவற்றை நீக்கும்.

சாறடைக்கிழங்கு:

சீதளம், நீரேற்றம், தேமல் தடிப்பு, குன்மம், வாத வலி, சிறு சிரங்கு, பிரமேகம், இருமல் ஆகியவை நீங்கும்.

கோவை கிழங்கு:

சீதளத்தையும், வாதத்தையும் உடைய கோவை கிழங்கானது திரிதோஷம், சந்துக்களின் குத்தல், பித்த கோபம், சருமதல குஷ்டம், ஜிக்வாரோகம், இரைப்பு, கோழை, மது பிரமேகம் இவற்றை போக்கும்.

கொல்லன் கோவை கிழங்கு:

மகாவிஷம், உடல் வெண்மை, சுரம், வாத சூலை, சிரங்கு, பெரு வியாதி, நமைச்சல், வக்கிர நேத்திரம், குடல் வலி, கண்ட மாலை, திரி தோஷம் ஆகியவற்றை நீக்கும்.

சீந்தில் கிழங்கு:

இதை அமிர்த கொடி என்றும் கூறுவர். சீந்தில் கிழங்கு சர்வ மேகம், இரத்த பித்த‌ ரோகம், ரூட்சை, மாந்த சுரம், பேதி, பித்த கணம், அமில பித்த ரோகம், சர்ப்ப விஷம் ஆகியவற்றை போக்கும்.

பொற்சீந்தில் கிழங்கு:

மதுநீர், ஷயம், அதி சுஷ்கம், சர்ப்ப விஷம், இரத்த பித்தம் இவற்றை போக்கும். உடலை நீடித்திருக்க செய்யும்.

கருடன் கிழங்கு:

இதை பேய் சீந்தில் என்றும் கூறுவர். கருடன் கிழங்கு அரையாப்பு கட்டி, வெள்ளை, கொறுக்கு, மாந்தை, அற்புதரணம் ஆகியவற்றை நீக்கும். சர்ப்பங்கள் நடுங்கும்.

கூகைக்கிழங்கு:

நீ நிறைந்துள்ள இளங்கூகைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால் உடல் வலிமை உண்டாகும். இருமலும், சுரமும், தாகமும் போகும்.

புளி நரளைக்கிழங்கு:

செம்பை தங்கம் போல தூய்மை ஆக்கும். வெளி முளை மூலத்தை போக்கும். உணவில் ருசியை தரும்.

மாகாளிக்கிழங்கு:

இதனை மாவலி, பரு நன்னாரி என்றும் கூறுவர். மாகாளிக்கிழங்கானது உட்சூடு, பித்த கோபம், சிலேத்தும நோய், வாத தோஷம் இவற்றை போக்கும். ஜடராக்கினியை வளர்க்கும்.

தண்ணீர் விட்டான் கிழங்கு:

அதிக மூத்திரம், புராதன சுரம், சோம ரோகம், வெள்ளை, உட்சூடு ஆகியவற்றை போக்கும்.

தாமரைக்கிழங்கு:

நேத்திர ஒளியையும், குளிர்ச்சியையும் தரும். பித்த காசம், மாமிச தாதுவை பற்றிய தவளை சொறி, வயிற்றுக்கடுப்பு ஆகியவற்றை நீக்கும்.

செவ்வல்லிக்கிழங்கு:

சிவந்த அல்லி கிழங்கானது செம்பின் களிமபை நீக்குவது தவிர அதை செந்தூரமும் ஆக்கும். பித்த பிரமேகத்தை விலக்கும்.

நெய்தல் கிழங்கு:

அக்கினிப்புண், பித்த எரிச்சல், திரிதோஷம், பிரமேகம், இரத்த கிராணி, பித்த நோய் ஆகியவற்றை போக்கும். விழிக்கு குளிர்ச்சியும், சுக்கில விருத்தியும் உண்டாகும்.

செங்கழுநீர் கிழங்கு:

இருமல், பித்த நோய், சர்வ மேகம், புணர்ச்சியின் வெப்பம் இவை நீங்கும். விழிக்கு குளிர்ச்சியும் உண்டாகும்.

கொட்டிக்கிழங்கு:

தேமல், பிரமேகம், தேகக்கடுப்பு, உட்சூடு ஆகியவற்றை போக்கும். இதனை குளிர்ச்சி என்று கூறுவர்.

நிலப்பூசணி கிழங்கு:

தளர்ந்த தேகம் உறுதிப்படுத்துவது மட்டும் அல்லாமல், இளைத்த சப்த தாதுக்களுக்கு செழுமையும், சரும தாதுவுக்கு ஒளியும், நுட்ப அறிவும் உண்டாகும். மலபந்தம் நீங்கும்.

பருங்கிழங்கு:

வயிற்றில் இரைச்சலை உண்டாக்குகின்ற வாத ரோகம், சர்வ விஷம், கபச்சோபை, பிரமேகம் இவை நீங்கும்.

சன்னிக்கிழங்கு:

பன்றி மாமிசத்துக்கு சமமான சன்னிக்கிழங்கானது பொடி கிரந்தியையும், புண்ணையும் உண்டாக்கும்.மூல ரோகத்தையும், இரத்த மய கிரகணியையும் நிவர்த்தி செய்யும்.

பெருவள்ளிக்கிழங்கு:

இதனை ஆள்வள்ளி கிழங்கு என்றும் கூறுவர். பெருவள்ளிக்கிழங்கால் திரிதோஷ தொந்தம், வாத மூலம், வாத குன்மம் முதலிய சில நோய்கள், அக்கினி மந்தம் இவை உண்டாகும்.

சிறுவள்ளிக்கிழங்கு:

சிறுவளளிக்கிழங்கால் மந்தம், கரப்பான், சிலேஷ்ம விருத்தி, முளை மூலம் ஆகியவை உண்டாகும். உதராக்கினி கெடும்.

காய் வள்ளிக்கிழங்கு:

இதனை வெற்றிலை வள்ளி என்றும் கூறுவர். காய் வள்ளி வாத ரோகத்தையும், சருமத்தின் மீது பெரிய சிறிய விரணங்களையும் விளைக்கும். உஷ்ண சாந்தி என்பர்.

சர்க்கரைக்கிழங்கு:

அதிமந்தமுள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிறந்த ஔஷத குணத்தை கெடுப்பது மட்டும் அல்லாமல் மூல முளையையும், குடல் இரைச்சலையும், கிரகணியையும் உண்டாக்கும்.

இவை அனைத்தும் செடியின் கிழங்கு வகைக‌ள் மற்றும் அவற்றின் குணங்கள் ஆகும். இவற்றை அறிந்து கொண்டு உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum