செடியின் விதை வகை
Page 1 of 1
செடியின் விதை வகை
துத்தி விதை:
கை, கால்களில் உண்டாகும் கருமேகமும், தோல் நோய்களும், உட்சூடும் நீங்கும்.
தகரை விதை:
இதை ஊசிதத்தகரை என்றும் கூறுவர். வண்டுக்கடி, அரைக்கடுவன், நீங்காத தினவு, பலவித புடை, சொல்ல முடியாத பித்த வேகம் ஆகியவை நீங்கும்.
நீர்முள்ளி விதை:
பிரமேகம், அதிசாரம், கப சோபை, ஆயாசம் ஆகியவை நீங்கும். சுக்கிலமும், சப்த தாதுக்களும் விருத்தியாகும்.
ஊமத்தை விதை:
சுரம், தாவர சங்கம விஷம், சந்நிபாத தோஷம், அதிசாரம் ஆகியவை போகும்.
வெங்காய விதை:
முறைப்படி இதை சாப்பிடுபவர்களுக்கு உட்சூடு, குன்மம், சிறுநீர் கோளாறுகள் நீங்கும்.
துளசி விதை:
நீர், எரிச்சல், சீதபேதி, உட்காங்கை முதலியவை நீங்கும்.
முள்ளங்கி விதை:
மலத்தையும், நீரையும் ஒழுங்காக கழிக்க செய்யும். சிறுநீரில் ஏற்படும் கல்லடைப்பை நிவர்த்தி செய்யும்.
உருத்தரசடை:
இதை பாகம் செய்து சாப்பிட்டால் மேக வெள்ளை, சீதபேதி, இரத்த மூலம் ஆகியவை நீங்கும்.
இவை அனைத்தும் செடியின் விதை வகைகள் மற்றும் அவற்றின் குணங்கள் ஆகும். இவற்றை அறிந்து கொண்டு உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» செடியின் பூ வகை
» செடியின் கிழங்கு வகை
» செடியின் கிழங்கு வகை
» செடியின் வேர் வகை
» செம்பருத்தி செடியின் மருத்துவ குணங்கள்
» செடியின் கிழங்கு வகை
» செடியின் கிழங்கு வகை
» செடியின் வேர் வகை
» செம்பருத்தி செடியின் மருத்துவ குணங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum