தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சைக்கிள் பயிற்சி

Go down

சைக்கிள் பயிற்சி Empty சைக்கிள் பயிற்சி

Post  amma Fri Feb 01, 2013 12:38 pm

இதயத்துக்கு உகந்த, உடற்பயிற்சிகளில் மிகவும் சிறந்தது சைக்கிள் பயிற்சி ஆகும். இது, குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த எளிமையான உடற்பயிற்சியாகும். அமெரிக்காவில் உள்ள பெரும்பான்மையான தேசியப் பூங்காக்களில் அங்கு வரும் மக்கள் பயன்படுத்துவதற்காக சைக்கிள்கள் வைக்கப்பட்டுள்ளன.

அங்கு வரும் மக்கள் தங்களுடைய உடல் நலத்தைப் பேணுவதற்காகப் பல மணிநேரம் இயற்கையான சூழலில், திறந்த வெளியில் சைக்கிள் பயிற்சி மேற்கொள்வது வழக்கமாகும். சைக்கிள் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் உடல் பருமன், ரத்தமிகு அழுத்த நோய், குடல் இறக்கம், மூட்டுச்சிதைவு நோய், வாதக் காய்ச்சல் நோய், முதுகுத் தண்டுவடம் நழுவுதல், கால் பெரு நரம்பு அழற்சி போன்ற நோய்களைக் குணப்படுத்த முடியும்.

மேலை நாடுகளில் பெரும்பான்மையான மருத்துவமனைகளில் சைக்கிள் பயிற்சியை ஒருவகையான மருத்துவமுறையாகக் கையாள்கிறார்கள். சிலவகையான நோயாளிகளுக்கு அவர்கள் தங்கள் உடல் நலத்தை மீண்டும் பெற சைக்கிள் பயிற்சியைப் பரிந்துரைக்கிறார்கள்.

மேலும் நீண்டநாள்களாகப் படுக்கையில் இருக்கும் நோயாளிகளின் வலுவிழந்த தசைகள் மீண்டும் உயிர்பெற, சைக்கிள் பயிற்சியை அளிக்கின்றனர். அன்றாடம் சிலமணி நேரம் மேற்கொள்ளும் சைக்கிள் பயிற்சியானது, இதயத் தசைகளை நன்கு வலுவாக்குவதோடு அல்லாமல், இதயத் தசைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவைப் பன்மடங்கு அதிகமாக்குகிறது,,,
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» சைக்கிள் ஓட்டுவதால் எரிக்கப்படும் கலோரியின் அளவு சைக்கிள் பயிற்சியை முதலில் மெதுவாக ஆரம்பித்து பின் படிப்படியாக வேகத்தை அதிகரிக்க வேண்டும். சராசரி ஆண் மற்றும் பெண் ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டுதல் மூலம் எரிக்கபடும் கலோரிகள். * மெதுவாக சைக்கிள் ஓட
» சைக்கிள் பயிற்சி
» சைக்கிள் பயிற்சி
» சைக்கிள் பயிற்சி
» ஆரோக்கியத்திற்கு உதவும் சைக்கிள் பயிற்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum