தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எனக்கு 33 வயதாகிறது. இதுவரை வேலை கிடைக்கவில்லை. எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்? எப்பொழுது திருமணம் நடைபெறும்? வாழ்க்கைப் போராட்டங்கள் எப்போது ஓயும்?

Go down

எனக்கு 33 வயதாகிறது. இதுவரை வேலை கிடைக்கவில்லை. எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்? எப்பொழுது திருமணம் நடைபெறும்? வாழ்க்கைப் போராட்டங்கள் எப்போது ஓயும்? Empty எனக்கு 33 வயதாகிறது. இதுவரை வேலை கிடைக்கவில்லை. எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்? எப்பொழுது திருமணம் நடைபெறும்? வாழ்க்கைப் போராட்டங்கள் எப்போது ஓயும்?

Post  meenu Fri Feb 01, 2013 12:23 pm

இதுவரை எந்த வேலையும் கிடைக்கவில்லை என்று சொல்கிறீர்கள். அரசு வேலை எப்போது கிடைக்கும் என்று கேட்கிறீர்கள். அரசு வேலைக்காக வேறெந்த வேலைக்கும் செல்லாமல் இருக்கிறீர்களா என்று புரியவில்லை.

அரசு வேலைக்காக முயற்சியுங்கள். அதேசமயம் வேறு வேலை கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையெனில் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டவராவீர்கள். ஏனெனில், உங்கள் வயது சோம்பியிருக்கும் வயதல்ல.

எத்தனை வேலையானாலும் வெறிபிடித்ததுபோல செய்யக்கூடிய வயது. உங்களுக்கென்று யாரும் எதையும் ரெடிமேடாக தரமாட்டார்கள். எந்தத் துறையில் வேண்டுமானாலும் இறங்குங்கள்.

ஆனால், இவ்வளவுதான் உழைக்க வேண்டுமென்று நீங்களே வரையறுத்துக் கொள்ளாதீர்கள். சட்டென்று சில வருடங்களில் உயரத்தில் இருப்பீர்கள். சனிக்கிழமையன்று விரதம் இருங்கள். சனி, வியாழக் கிழமைகளில் கீழ்க்காணும் திருப்பாவை 10வது பாடலை பெருமாள் ஆலயத்தில் 8 தடவை படியுங்கள்.

இப்போது வேலை கிடைத்தாலும், நவம்பருக்கு பின் நல்ல நிலைமை ஏற்படும்; இல்லறமும் அமையும்.

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத்துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்
பண்டொரு நாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த
கும்பகர்ணனும் தோற்றும் உனக்கே
பெருந்துயில்தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  எனக்கு 54 வயதாகிறது. 1998 வரை அலுவலகத்தில் நல்ல முறையில் வேலை செய்தேன். பின்னர் வேலை சரியில்லாததால் விலகிவிட்டேன். வேறு தொழில் செய்யலாமா? சொந்த வீடு கிடைக்குமா? செய்வினை செய்துள்ளார்கள் என சொல்கின்றனர்... எனக்கு வழிகாட்டுங்கள்.
»  என் வயது 70. என் மகளுக்கு 34 வயதாகிறது. இன்னும் திருமணம் கை கூடாமல் தட்டிப்போகிறது. எனக்கு பிறகு அவளது வாழ்வென்ன ஆகுமோ என்கிற கவலையே என்னை பெரிதும் வருத்துகிறது. அவளுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் எனக்கு மன நிம்மதி கிடைக்கவும் தக்க பரிகாரம் சொல்லுங்கள்
»  எனது பேரன் பழனிராஜனுக்கு 30 வயதாகிறது. தற்போது மும்பையில் வேலை பார்த்து வருகிறான். திருமணம் தாமதமாகிக் கொண்டே வருகிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்?
»  ஆனால் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கவில்லை. பிறருக்கு உதவப்போய் ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார். தொல்லைகள் நீங்கி வாழ்வில் வளம்பெற என்ன செய்ய வேண்டும்?
»  ஆனால் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கவில்லை. பிறருக்கு உதவப்போய் ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார். தொல்லைகள் நீங்கி வாழ்வில் வளம்பெற என்ன செய்ய வேண்டும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum