அன்றாடம் செய்யும் வேலைகளே உடற்பயிற்சி தான்
Page 1 of 1
அன்றாடம் செய்யும் வேலைகளே உடற்பயிற்சி தான்
• பஸ் ஸ்டாப்பில், ரயில் நிலையத்தில் நிற்கும் போது, எப்போது வரும் என்று நொந்து போய் நிற்கக்கூடாது. கையில் பை இருந்தால் அதை பிடித்தபடி கைகளை தொங்க விடக்கூடாது. 45 டிகிரி உயர்த்தி பிடிக்க வேண்டும். இன்னோரு கையில் புத்தகம் வைத்து படிக்கலாம். இப்படி கைகளை மாற்றி மாற்றி செய்தால், கைகளில் சுறுசுறுப்பு வந்துவிடும்.
• பஸ், ரயிலில் பயணம் செய்து ஆபீஸ் செல்பவராக இருந்தால், அவற்றில் பயணம் செய்யும் போது கைப்பிடியை இரு கைகளாலும் பிடியுங்கள். கால்களின் விரல்களை பதியவைத்து சற்று உடலை உயர்த்தியவாறு நிறுத்துங்கள். பத்து நொடிகள் இப்படி மூன்று முறை செய்தால் போதும். கால் விரல்களில் ஆரம்பித்து கை தசைகள், எலும்புகள் வரை வலுப்பெறும்.
• ஆபீசில் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்யும் போது, ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஐந்து நிமிட இடை வெளியில் காலாற நடக்க வேண்டும். இருக்கையில் உட்கார்ந்தபடியே கால்களை நேராக நீட்டி பத்து நொடிகள் வைத்திருக்கலாம். கைகளை தோள்களில் இரு பக்கமும் கழுத்து தசைகளை வருடி விட்டால், தலைவலி வராது. சோர்வு போய்விடும். தசைகள் முறுக்கேறி இருக்கும். உட்கார்ந்தபடியே மூச்சை இழுத்து விட்டபடி மூச்சுப்பயிற்சியும் செய்யலாம். அப்போது தான் போதுமான சுவாசம் கிடைத்து, ஏசி.,அறையானாலும் உடலில் தளர்வு ஏற்படாது.
• மதிய உணவு முடித்தபின், உண்ட களைப்பு இருக்கத்தான் செய்யும். எப்போது ஏ.சி.,அறையில் இருக்கையில் போய் விழுவோம் என்றிருக்கும். ஆனால், அப்படி செய்யாதீர்கள். லிப்டை பயன்படுத்தாமல், படிகளில் ஏறிப்போங்கள். தரை தளமாக இருந்தால், காலாற நடந்து போய் உட்காருங்கள். ஓட்டலுக்கு நடந்து போங்கள். திரும்பி நடந்து வாருங்கள்.
• மாலையில், வீடு திரும்பியபின், வீட்டில் டிவி முன் உட்கார்ந்து விடாதீர்கள். சிற்றுண்டி முடித்து விட்டு, காலாற நடங்கள். கோவில், பூங்கா சென்று நடக்கலாம். அமைதியான இடமாக பார்த்து சென்றால், பயன் அளிக்கும். அமைதியான இடத்தில் அமரும் போது, கண்களை மூடி சில நிமிடங்கள் தியானம் செய்யலாம் மூச்சை இழுத்து விட்டபடி, மூச்சு பயிற்சியும் செய்யலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உடற்பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டியவை
» தளர்வுறச் செய்யும் உடற்பயிற்சி
» உடற்பயிற்சி செய்யும் முறைகள்
» முறைப்படி மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் நம்மை பலவித நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன. பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும் ஒன்றாகும். ஏரோபிக்ஸ், கை கால் நீட்டுதல், சைக்கிள் ஓட்டுதல்,
» உடற்பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை
» தளர்வுறச் செய்யும் உடற்பயிற்சி
» உடற்பயிற்சி செய்யும் முறைகள்
» முறைப்படி மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் நம்மை பலவித நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன. பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும் ஒன்றாகும். ஏரோபிக்ஸ், கை கால் நீட்டுதல், சைக்கிள் ஓட்டுதல்,
» உடற்பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum