முதுகு வலி குறைய பயிற்சி
Page 1 of 1
முதுகு வலி குறைய பயிற்சி
முதுகு வலி குறைய பயிற்சி
தற்போதுள்ள காலகட்டத்தில் பலரும் முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் உடல் உழைப்பு இல்லாததே. கம்யூட்டர் யூகத்தில் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் 30 வயதை தொடும் போது அவர்கள் முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள்.
முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் இந்த எளிய பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக நிவாரணம் அடைவதை காணலாம். முதலில் விரிப்பில் அமர்ந்து கால்களை முன்புறமாக நீட்டிக்கொள்ள வேண்டும். சுவாசத்தை இயல்பான நிலையில் வைத்து முன்னால் குனிந்து உங்கள் கைகளால் கால்களின் கணுக்காலை தொட வேண்டும்.
அவ்வாறு குனியும் போது கால் முட்டுகள் வளைய கூடாது. இந்த நிலையில் 10 முதல் 20 வினாடிகள் இருக்க வேண்டும். 5 வினாடிகள் ஒய்வு எடுத்த பின்னர் மறுமுறை செய்யவும். பின்னர் படத்தில் உள்ளது போல் முட்டியை வளைத்து வைத்து கொண்டு கால் கணுக்கால்களை தொட வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்வதால் முதுகெலும்பு, தோள்கள் நன்கு வலிமை பெறுகிறது. மேலும் செரிமானத்தை தூண்டுகிறது. உங்கள் கால்விரல்கள் தொடும் முயற்சியில் ஈடுபடும் போது முதுகுத்தண்டில் அதிக வலி இருந்தால் இந்த பயிற்சியை செய்ய கூடாது. மேலும் இந்த பயிற்சியை செய்யும் போது முதுகிற்கு அதிக அழுத்தம் கொடுக்க கூடாது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» முதுகு வலி குறைய இலகுவான பயிற்சி.
» தோள், நடு முதுகு பயிற்சி
» மேல் முதுகு பயிற்சி
» முதுகு, இடுப்புக்கான பயிற்சி
» முதுகு வலி குறைய
» தோள், நடு முதுகு பயிற்சி
» மேல் முதுகு பயிற்சி
» முதுகு, இடுப்புக்கான பயிற்சி
» முதுகு வலி குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum