தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சப்போட்டா மில்க்ஷேக்

Go down

சப்போட்டா மில்க்ஷேக் Empty சப்போட்டா மில்க்ஷேக்

Post  meenu Thu Jan 31, 2013 2:40 pm

பாலின் சக்தியுடன், சப்போட்டா பழத்துக்கே உரித்தான சத்து மற்றும் இயற்கையான இனிப்புச் சுவை சேர்த்துச் செய்யப்படும் `சப்போட்டா மில்க் ஷேக்' அனைத்து வயதினருக்கும் விருப்பமான வயிறு நிரப்பும் பானம். வெயிலின் தாக்கத்தையும் அலைந்து திரிந்ததனால் ஏற்படக்கூடிய உடல் அயர்ச்சியையும், மனத் தளர்வையும் உடனடியாக குறைக்க வல்லது.இந்த குளுகுளு சப்போட்டா மில்க் ஷேக். வெயில் காலத்தில் வியர்த்து விறுவிறுக்காமல் மிகமிக சுலபமாக இதனை தயாரிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.

தேவையான பொருட்கள்:

சப்போட்டா பழங்கள் - 4
குளிர்ந்த பால் - 2 கப்
தேன் - தேவையான அளவு
ஐஸ் கட்டிகள் - 4 அல்லது 5

செய்முறை:

* சப்போட்டா பழங்களின் தோலை மெல்ல சீவி, அவற்றின் விதையை எடுத்துவிட்டு, பழத்தை சிறு துண்டுகளாக்கி மிக்சியில் போடவும்.

* பழத்துண்டுகளுடன், பால், தேன் சேர்த்து அவை நன்கு நுரைத்து வரும் வரை விட்டுவிட்டு மிக்சியில் அடிக்கவும். (பல்ஸ் மோட் உபயோகித்து மிக்சியில் அடிக்கலாம்).

* நுரைத்து வந்த பால்- பழக் கலவையை, உயரமான கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி மேலே ஜில்லென்று ஐஸ் கட்டிகள் போட்டால் குளுகுளு மில்க் ஷேக் ரெடி. அப்படியே குடிக்கக் கொடுக்கலாம்.

உபயோகமான குறிப்பு:

* பழுத்த வாழைப் பழங்களை உபயோகித்து வாழைப்பழ மில்க் ஷேக் இம்முறையில் தயாரிக்கலாம்.

* பொடித்த பனங்கற்கண்டு உபயோகித்து சற்றே வேறுபட்ட சுவையுடனும் மில்க்ஷேக் தயாரிக்கலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum