மாங்காய் வேம்பு பச்சடி
Page 1 of 1
மாங்காய் வேம்பு பச்சடி
தேவையான பொருட்கள்:
மாங்காய்- 1
வெல்லம்- 100 கிராம்
உப்பு- அரை டீஸ்பூன்
மஞ்சள் பொடி- 1 சிட்டிகை
அரிசி மாவு- 2 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் (அ) மிளகாய் வற்றல்- 2
செய்முறை:
* இதற்கு அதிக முற்றல் இல்லாத தித்திப்பும் புளிப்புமான சுவை கொண்ட மாங்காயைத் தேர்ந்தெடுக்கவும்.
* மாங்காயை தோல் சீவாமல் பெரிய துண்டுகளாக நறுக்கி முக்கால் கப் தண்ணீர், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக விடவும். பின்பு வெல்லம் சேர்த்துக் கிளறி அரிசி மாவு கரைத்து விட்டுக் கொதிக்க விடவும்.
* பச்சடி இறுகி வந்ததும் இறக்கி விடவும்.
* வேறு ஒரு வாணலியில் கடுகு, பச்சை மிளகாய் அல்லது மிளகாய் வற்றல் தாளித்து பச்சடியில் கொட்டி, வறுத்த வேப்பம் பூவையும் நொறுக்கிப் போட வேண்டும்.
* இந்த பச்சடி உடலுக்கு மிகவும் நல்லது. இந்த பச்சடியை சர்க்கரை நோயாளிகள் உணவில் சேர்த்து கொண்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மாங்காய் பச்சடி
» மாங்காய் பச்சடி
» வினோதமான வேம்பு:
» தமிழ் புத்தாண்டு : மாங்காய் இனிப்பு பச்சடி
» கோடை காலத்திற்கேற்ற சத்தான மாங்காய் தயிர் பச்சடி
» மாங்காய் பச்சடி
» வினோதமான வேம்பு:
» தமிழ் புத்தாண்டு : மாங்காய் இனிப்பு பச்சடி
» கோடை காலத்திற்கேற்ற சத்தான மாங்காய் தயிர் பச்சடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum