கோர் பயிற்சிகள்
Page 1 of 1
கோர் பயிற்சிகள்
பொதுவாக ஜிம்மில் கார்டியோ பயிற்சிகள் செய்யும் அனைவருக்கும் தரை பயிற்சிகள் எனும் ப்ளோர் பயிற்சிகள் செய்ய வேண்டும். கால்களால் நடக்கும் போது நாம் புவியீர்ப்பு சக்திக்கு எதிராக நம் முதுகெலும்ப்பை நேராக்கி நடக்கின்றோம் அதன் காரணமாக நமது முதுகெலும்பு வயதாக வயதாக தேய்வு பெறுகின்றது.
அதை சுற்றியுள்ள தசைகள் அதிக சோர்வடைகின்றது. இது குறிப்பாக பிரசவத்திற்கு பின்னும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கும் முதுகெலும்பு தேய்மானம் அதை சுற்றியுள்ள தசைகளில் வலி என அதிகம் அவதியுறுவர்..
அதிலும் ஜிம்மில் உள்ள டிரெட்மில், எலிப்டிகல்ஸ் போன்ற இயந்திரங்களில் நடக்கும் போது நமது முதுகெலும்பு இன்னும் அதிக பளுவுக்கு உள்ளாகின்றது அதனால் இன்னும் அதிகமாக பிரச்சினைகளை சந்திக்க நேரும் இதை தவிர்க்க வேண்டுமானால் கண்டிப்பாக ப்ளோர் பயிற்சிகள் எனும் தரை பயிற்சிகளை நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும்
அப்படி செய்ய இயலாதவர்கள் ஜிம்மில் சென்று கார்டியோ பயிற்சிகளை மேற்கொள்ளாமல் இருத்தலே நலம். ப்ளோர் பயிற்சிகளை தவிர்த்து கார்டியோ பயிற்சிகளை மேற்கொண்டு முதுகெலும்பிற்கு பிரச்சினையை உண்டு பண்ணாமல் இருத்தல் இன்னும் நல்லது. ப்ளோர் பயிற்சிகளை மூன்று வகையாக பிரிக்கலாம். அவை....
1 CORE EXERCISE
2 ABBS EXERCISE
3 SIDE EXERCISE
கோர் பயிற்சிகள்......
இப்பயிற்சிகள் பெரும்பாலும் நமது யோகப்பயிற்சிகளை முன்னிறுத்தியே செய்யப்படுகின்றது... என்ன இது அறிவியல் ரீதியாக இன்னென்ன தசைகள் இப்பயிற்சிகள் மூலம் இவ்வாறு பலன் பெறுகின்றது என உறுதி செய்யப்படுகின்றது..
கோர் தசைகள் நமது இடும்பெலும்பின் கூட்டுக்குள் அமைந்துள்ளது. கோர் பயிற்சிகள் இடும்பெலும்பு கீழ் முதுகெலும்பு , இடுப்பு வயிறு போன்ற பகுதியில் உள்ள தசைகளை உறுதியாக்குகின்றது. உடலுக்கு நல்ல ஸ்திரதன்மையை தருகின்றது... எல்லா விளையாட்டு வீரர்களும் அவர்கள் கோர் தசைகளின் வலுவை பொறுத்தே அவர்களின் உடல் இயக்கம் அமைகின்றது...
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஸ்விஸ் பந்து கோர் பயிற்சி
» ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்
» ஏரோபிக்ஸ் பயிற்சிகள்
» எடை தூக்கும் பயிற்சிகள்
» உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சிகள்
» ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்
» ஏரோபிக்ஸ் பயிற்சிகள்
» எடை தூக்கும் பயிற்சிகள்
» உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum