எடை தூக்கும் பயிற்சிகள்
Page 1 of 1
எடை தூக்கும் பயிற்சிகள்
எடை தூக்கி செய்யப்படும் பயிற்சிகள் மூலம் தளர்வடைந்த தசைகள் இறுக்கப்படுகிறது. ஒவ்வொரு பகுதி தசைக்கும் ஒவ்வொரு விதமான உபகரணங்கள் மூலம் செய்யப்படும் எடை தூக்கும் பயிற்சிகள் அதிக அளவில் நன்மை கிடைப்பதாக உள்ளது.
நல்ல அழகான கட்டுக்கோப்பான உடலழகை பெறவும், வயதாகும் காலங்களில் வரும் தசை இழப்பு பிரச்சினைகளுக்கும் பளு தூக்கும் பயிற்சி சிறந்தது. ஏரோபிக் பயிற்சிகளும் உடற்பயிற்சிகளும் உங்களின் தசைகள் எடுத்து கொள்ளும் ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து உங்களின் இருதயமும், நுரையீரலும் நன்கு செயல் பட உதவி புரிகின்றன.
பளு தூக்கும் பயிற்சிகள் எனப்படும் எடை தூக்கும் பயிற்சிகள் உங்கள் தசைகளின் செயல்பாட்டை அதிகரிக்க செய்கின்றன. தசைகளுக்கு அதன் எடையை விடவும் அதிக அளவு எடை கொண்டு பயிற்சி செய்யப்படுவதால் அவை நன்கு வலுப்படும். எடை தூக்கும் பயிற்சிகள் ஆரம்பிபதற்கு முன் வார்ம் அப்பும் (warm up) ஸ்டெரச்சிங்கும் (stretching )மிக அவசியம்.
எடை தூக்கும் பயிற்சியை மற்ற உடற்பயிற்சியை விட அதிக அளவு பரிந்துரைக்கப்படுவதற்கு காரணங்கள் இவையே.....
- எடை தூக்கும் பயிற்சிகள் உடலில் உள்ள கொழுப்பை தசையாக மாற்ற உதவும் (CONVERTS FAT INTO MUSCLES)
- தசைகளின் அளவை அதிகரிக்கவும் ( MUSCLE MASS)
- உடலை கட்டுறுதி பெற வைக்கவும் (BODY BUILDING)
- எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கவும் (BONE DENSITY)
- உடலின் நெகிழும் தன்மையை அதிகரிக்கவும் (FLEXIBILITY RATE)
- வளர்சிதை மாற்றங்கள் வீதத்தை அதிகரிக்கவும் (INCREASES METABOLIC RATE)
- பொதுவாக எடை தூக்க டம்பெல்ஸ் (dumbbells)+ பார்பெல்ஸ்(barbells) தான் அதிக அளவில் உலகில் பயன்படுத்துகின்றனர்.
இத்தகைய பயிற்சிகளை செய்து வந்தால் கட்டான உடலழகை பெறவும், வயதாகும் காலங்களில் வரும் தசை இழப்பு பிரச்சினைகளில் இருந்து விடுபடவும் முடியும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களுக்கான எடை தூக்கும் பயிற்சிகள்
» எடை தூக்கும் பயிற்சி செய்யும் முறைகள்......
» ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்
» உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சிகள்
» யான்பெற்ற பயிற்சிகள்
» எடை தூக்கும் பயிற்சி செய்யும் முறைகள்......
» ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்
» உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சிகள்
» யான்பெற்ற பயிற்சிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum