தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்

Go down

ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் Empty ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்

Post  amma Thu Jan 31, 2013 2:01 pm


சீராக உடல் இயங்க, உடற்பயிற்சி அவசியம். ஆனால், சமயங்களில் உடற்பயிற்சியே சில சிரமங்களைத் தரும் அபாயமும் இருக்கிறது. அதனால், உடற்பயிற்சியில் ஈடுபடும் முன்னரும், பின்னரும் என்ன செய்ய வேண்டும் என்பது முக்கியம்.உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு வார்ம் அப் (Warm Up), ஸ்ட்ரெச்சிங் (Stretching)பயிற்சிகளையும்...

உடற்பயிற்சி செய்த பின்பு கூல் டவுன் (Cool Down) , ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளையும் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். இல்லை என்றால், கை - கால் தசைகளில், மூட்டுகளில்... இறுக்கம், வலி, சோர்வு போன்ற தொந்தரவுகள் உண்டாகும்.

ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்....

* கால்களைச் சற்று அகலமாக வைத்து நிற்க வேண்டும்

* வலது கையால் ஏதேனும் ஒரு பிடிமானத்தை ஏற்படுத்திக் கொண்டு இடது கையால் இடது கணுக்காலைப் பின்பக்கமாக வளைத்துப் பிடிக்க வேண்டும். கால் முட்டி மடங்கிய நிலையில் இருக்க வேண்டும்.

* 10 நொடிகளுக்குப் பிறகு படம் பழைய நிலைக்கு வர வேண்டும். (கால்களை அகலமாக வைத்து நிற்க வேண்டும்)

* இடது கையால் ஏதேனும் ஒரு பிடிமானத்தை ஏற்படுத்திக் கொண்டு வலது கையால் வலது கணுக்காலைப் பின்பக்கமாக வளைத்துப் பிடிக்க வேண்டும். முன்பு செய்வதைப் போலவே கால் முட்டி மடங்கிய நிலையில் இருக்கட்டும்.

* 10 நொடிகளுக்குப் பிறகு முதல் நிலைக்கு வரவும். (கால்களை அகலமாக வைத்து நிற்க வேண்டும்)
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum