கோஸ் சட்னி கோஸ் சட்னி
Page 1 of 1
கோஸ் சட்னி கோஸ் சட்னி
தேவையான பொருட்கள்:
முட்டைக்கோஸ் - 200 கிராம்
பெ.வெங்காயம் - 1
தக்காளி - 1/2
பூண்டு - 2 பல்
சிகப்பு மிளகாய் - 3
புளி - மிக சிறிய அளவு
உ.பருப்பு - 1 மேஜைக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காய தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - 1 சிறிதளவு
செய்முறை:
* முட்டைக்கோஸை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் விட்டு உ.பருப்பை பொரிய விட்டு, சிகப்பு மிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி, புளி ஒன்றின் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.
* கடைசியாக கோஸை போட்டு வதக்கவும்.
* நன்கு ஆறிய பின் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
* பின் ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பில்லை, பெருங்காய தூள் போட்டு தாளித்து அரைத்த கலவையில் கொட்டவும்..
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum